பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 குற்றம் பார்க்கில் சோடாவோடு வந்தான் "நான் உங்களை நம்பாமல் இல்லிங்க எதுக்கும் அதைப் பார்த்து ஆகணும். உங்களால் வரமுடியாட்டா பரவாயில்லை, கிளார்க்கை அனுப்புங்க" என்றான் சிவகுமார். தலைவரின் முகம் சினத்தில் தடித்தது "இப்போ என்ன செய்யணுமுங்கிறீங்க?" "பழத்தோட்டத்தைப் பார்க்கணுமுங்கிறேன்." "பார்க்காவிட்டால்..." "பழத்தோட்டம் இல்லை என்கிற முடிவுக்கு வருவேன்." சோடாவை உடைக்கப் போன மச்சான்காரன் அந்தப் பாட்டிலை எடுத்து சிவகுமாரை ஓங்கிக் கொண்டே, “ டேய், கணக்கு சரியாய் இருக்கிறபோது பழத்தோட்டம் எதுக்குப் பார்க்கணும்? பழத்தோட்டம் பழத்தோட்டமுன்னு சொன்னால் முகம் பழமாயிடும். எங்களை, என்ன திருட்டுப் பயல்கள் னு நினைச் சியா?" என்றான். சிவகுமார், பேச வாயெடுக்குமுன், "பேசினால் உதைப்பேன். மரியாதையாய்ப் போயிடு இல்ல, பூமிக்குள்ளே போயிடுவ" என்றான் மச்சான் பஞ்சாயத்துத் தலைவர், உலகத்தில் எதுவுமே நடக்காதது போல், ஈஸிசேரில் மல்லாந்து, பாதிக் கண்ணை மூடியவாறு, ஒரு பாட்டை முணுமுணுக்க, பார்ட்-டைம் விசிறியால் அவருக்கு வீசினான். மச்சான் சோடாவை உடைத்துக் குடித்தான். சிவகுமார், அவசர அவசரமாக யூனியன் ஆபீஸ் வந்து, சட்டத்தின் சரத்துக் கண்ள மேற்கோள் காட்டி, ஒரு பெரிய ரிப்போர்ட் தயாரித்தான். "பழத்தோட்டத்தைக் காணவில்லை" என்று மேலிடத்திற்குப் புகார் செய்தான். அந்தப் புகார் போன பதினைந்து நாளில், பலன் கிடைத்தது. பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி சிவகுமாரை, அந்த யூனியனில் காணவில்லை!