பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 சாமியாடிகள் சுடலை மாடசாமி கோவிலில் ஊரே திரண்டிருந்தது. சுடலைமாடன், கோட்டை மாடன், சங்கிலி மாடன் என்ற இருபத்தோரு தேவதைகளுக்குப் படைப்பு' வைத்திருந்தாலும், சுடலை மாடசாமிதான் அந்த ஊருக்கு ஹீரோ. கோவில் முகப்பு வாயிலுக்குச் சற்று உள்ளே, வில்லுப்பாட்டு நடந்துகொண்டிருந்தது. 'பாடகி வடிவு போடு போடென்று பாட்டுக்களைப் பொழிந்து கொண்டிருந்தாள். காத்தமுத்து ஆடிக்கொண்டிருந்தான். ஆ பெல் Tெ & L) (3) மாடசாமி ஆட்டுவிப்பதாகச் சொன்னார்கள். வில்லடிப்பவள் பெண் என்பதாலும் - அதிலும் அழகிய பெண் என்பதாலும் கூட்டம் அதிகம். வடிவு இடது கையை லாவகமாய் மேலே உயர்த்த, அவளுடைய முறை மாப்பிள்ளை அவள் கையை உரச, சுடலை மாடசாமி இரண்டு பேர் கைகளிலும் தன் கையை வைத்து ஆட. ஒரே உல்லாசம். தூக்கி வைக்கும் கால்களுக்கு சுடலை மாடசாமிக்கு துத்திப்பூ-சல்லடமாம் எடுத்து வைக்கும் கால்களுக்கு சுடலை மாடசாமிக்கு எருக்கணம்பூ - சல்லடமாம் என்று வடிவு பாடினாள். 'வடிவின் நல்லதங்காள்' குரலும், இறுகக் கட்டிய சேலையில் துள்ளிய வாளிப்பான உடலும், சிலம்பைப் போல, கோலாட்டத்தைப் போல, வில்லை அவள் அடித்த நேர்த்தியும், முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சாய்ந்து, சிரித்துக் கொண்டே ஆடிய லாவகமும் கூட்டத்தின் கவனத்தை முற்றிலும் அவள் பக்கமே திருப்பிவிட்டன. பாவம், சுடலை மாடசாமி ஒரு கையில் தீப் பந்தத்தையும், மற்ற கையில் வெட்டரிவாளையும், வாயில் இரண்டு )ييلا) (ملا வாழைப்பழங்களையும் வைத்துக் கொண்டு, சமத்காரமாய்,