பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 குற்றம் பார்க்கில் ஆர்ப்பாட்டமாய் ஆடியபோதிலும், அப்ளாஸ் கிடைக்க வில்லை. மற்ற சில சாமிகளும் 'அம்போ' என்று ஆடிக் கொண்டிருந்தன. வடிவ பாடுவதை நிறுத்திவிட்டாள். ஊரின் கண்களும், முறை மாப்பிள்ளையின் சிவந்த விழிகளும் வடிவை மொய்க்க, வடிவின் கண்களோ அவன் எங்கே இருக்கிறான்?' என்று வட்டமிட்டன. அவன் இன்னும் வரவில்லை. வடிவுக்கு ஒரே ஏமாற்றம் திடீரென அவள் குரல் உயர்ந்தது. 'பெரியபுள்ளி' என்றால் லேட்டாகத்தான் வரவேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டிருந்த அவன், அப்போதுதான் வந்து கல் தூணின் மீது சாய்ந்து உட்கார்ந்தான். அவனுக்குப் பலத்த வரவேற்பு. சுற்றிலும் பரபரப்பு. காரணம், அவன் ஒரு சினிமாத் துணை நடிகன். சென்னையிலிருந்து கோவில் கொடைக்காக வந்திருந்த அவனைப் பலர் வளையமிட்டார்கள். வடிவின் உற்சாகத்திற்குக் காரணம் அவள் இந்த ஹீரோவைக் காலையில் தற்செயலாகச் சந்தித்த போது, அவளை எப்படியும் பிரபல பின்னணிப் பாடகி. ஆக்கிவிடுவதாக அவன் அளித்திருந்த வாக்குறுதிதான். அவளை முன்னுக்குக் கொண்டு வருவதாக அவன் திரித்த கயிறு, வில்லின் கயிற்றை விட உறுதியானது என்று, வடிவு நம்பினாள். சுடலைமாடனுக்கும். கோட்டைமாடனுக்கும் பாடி, வடிவக்கு அலுத்துவிட்டது. ஹீரோ வந்ததும், அவன் இங்கேயே வாய்ஸ் டெஸ்ட் செய்யட்டும் என்று நினைத்தாளோ என்னவோ, சினிமா மெட்டில் தொடங்கிவிட்டாள் வடிவு. "இவரு. சுடலைமாடசாமி - நல்லா துள்ளி ஓடும் சாமி ஒ.ஹோ...நல்லா ஆடும் சாமி - ஓ.ஹோ" என்று பாடிய ஜோரில் "சினிமாவில் பாடப்போறேன் சாமி" என்று பாடிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள். ஆனால், அவள் பாடியதைக் கேட்காமல் 'பாடி' யையே பார்த்துக் கொண்டிருந்த வடிவு பக்தர்கள் இதையும் ரசித்து மகிழ்ந்தார்கள். வடிவின் சினிமா மெட்டை ரசிக்காத ஒரே ஆத்மாவும்