பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 89 அங்கே இருந்தது. அது முதியவர் ஐயாசாமி. ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வடிவைக் கொண்டு வந்ததே அவர்தான். கோவில் கொடைக்காக 'வரி போட்ட போது, வாலிபர்களான தீவிரவாதிகள் (லெஃப்ட் அட்வெஞ்சரிஸ்ட்) கனவுக் கன்னி காந்தா, கோ ல் ரிக்கார்டு டான்ஸ் ஆட வேண்டும் என்று துள்ள, வயதான வலதுசாரிகள் (ரைட் ரியாக்ஷனரி) எழுபது வயது மதுரை வீரன் தான் வில்லுப்போடவேண்டும் என்று வாதாட முற்போக்கு நடுத்தரவாதி (லெஃப்ட் ஆஃப் தி சென்ட்டரி) ஐயாசாமி ஒரு 'காம்ப்ரமைஸ்' யோசனை சொன்னார். கவர்ச்சியையும் வில்லுப்பாட்டையும் சேர்த்து வடிவை ஏற்பாடு செய்யலாம் என்பது அவர் சொன்ன யோசனை தான். இப்போது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறினார். ஐயாசாமியைப் போல, முப்பது வயது ரத்தினமும் திணறிக் கொண்டிருந்தான். ஆனால், அவன் துக்கத்திற்குக் காரணம் வேறு. போன வருஷம் இதே நாளில் அவன் அப்பா முத்துப்புதியவன், 'சுடலை மாடசாமி ஆடினார். இப்போது அவர் உயிருடன் இல்லை. காத்தமுத்து ஆடுகிறான். பக்கத்தில் யாரோ பேசிக்கொண்டது அவன் காதில் விழுந்தது. "உம் - முத்துப்புதியவன் ஆடினா எப்படி இருக்கும்? இந்தக் காத்தமுத்து மேலயா சாமி வரணும்?" "நீரு ஒண்னு காத்தமுத்து அகம்பாவத்துல ஆடுகிறான். இந்த ஊத்தப்பல்லுப் பயகிட்ட சாமி வருமாக்கும்?" "வே, அப்பன் ஆடின சாமி மகன்கிட்டதான் வரும். இப்ப சங்கரன் ஆடின மாடத்தி அவன் மண்டையைப் போட்டதும் அவன் மவன் மாடக்கண்னு தானே ஆடறான்?" "நீரு சொல்றது சரிதான் மச்சான். இப்ப ரத்தினம் பய மொகத்தைப் பாரும், சாமிக்களை தெரியது. உடம்புகூட குலுங்குறாப் போல இருக்குது." இவர்கள் சொல்வதைக் கேட்கக் கேட்க ரத்தினத்தின் உடல் குலுங்கத் தொடங்கியது.