பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 குற்றம் பார்க்கில் "சரியாச் சொன்னீர். சுடலைமாடசாமி அர்த்த ராத்திரிலே தான் ஆடும். இந்தக் காத்தமுத்துப் பய கம்மா தண்ணி போட்டுட்டு இப்பவே குதிக்கறான்." "நல்லாச் சொன்னீர் அர்த்த ராத்திரி இதோ வரப்போவது. உண்மையான சுடலைமாடசாமி நம்ம ரத்தினத்தைப் புடிச்சுத்தான் ஆட்டப் போவது.' - ரத்தினத்தின் உடல் ஆடிக்கொண்டிருந்தது. அந்த இரண்டு பேர்வழிகளும் ஒரு மேளத்தைக் கொண்டு வந்து அவன் முன்னால் முழக்கினார்கள். 'டங்கு டங்கு' என்று எழுந்த மேளத்தின் ஒலியில் ரத்தினத்தின் உடம்பு இன்னும் வேகமாய்க் குலுங்கியது. உடனே அவன் மீது சந்தனத்தை அப்பினார்கள். ஒரு தீவத்தியைக் கொளுத்தி அவன் கையில் கொடுத்துவிட்டு, "அர்த்த ராத்திரியில ஆடுறதனால, உண்மையான சுடலைமாடசாமி இதுதான்" என்று வத்தி வைத்தார்கள். ரத்தினத்துக்கு இப்போது 'சூடு' பிடித்துவிட்டது. வேறொரு பக்கத்தில் இன்னும் ஆடிக்கொண்டிருந்த காத்தமுத்து திடீரென்று தன் கழுத்தில் ஆடிய மாலைகளில் ஒன்றை எடுத்து அந்தத் துணை நடிகனின் கழுத்தில் போட்டுவிட்டு, "டேய்! அடுத்த வருஷத்துக் குள்ளார நீ பயாஸ்கோப்புல ஈரோவா, நடிக்கலேன்னா நான் கடலை மாடசாமி இல்லடா, என் பேரை மாத்திடு" என்று கூச்சலிட்டான். ஒரு குரல் காத்தமுத்துவை அதட்டியது. "டேய், நீ சுடலைமாடனே இல்லடா. எப்படிடா பேர மாத்த முடியும்?" என்று இரைந்து கொண்டே அங்கு வந்த ரத்தினம் சுழன்று சுழன்று ஆடினான். காத்தமுத்துவா, அசறுகிறவன்? அவன் சமாளித்துக் கொண்டு ரத்தினத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, "பேச்சியம்மா, வந்துட்டியா. வா. ரெண்டு பேரும் சேர்ந்து ஆடலாம்" என்று குலுங்கிக் குலுங்கி ஆடினான். ஆடிக்கொண்டே இரு 'சாமியாடி'களும் போர் தொடுத்தார்கள் $ ரத்தினம் கேட்டான். "நீ யாருடா?" காத்தமுத்து நான் சுடலைடா" என்றான்.