பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு-சமுத்திரம் 91 "சி.ஊத்தப்பயலே.உன்கிட்ட நான் வருவனாடா? இதோ... (மார்பைத் தட்டிக் கொண்டு) இவன் அப்பன் என்னை ஆடினான். இப்போ இவங்கிட்ட வந்திருக்கேன்...நான் என் ைமனுஷனா கட்சி மாற.நான் தெய்வண்டா? அப்பங்கிட்டே இருந்து மவன் கிட்ட வந்த தெய்வண்டா .." என்று ரத்தினம் குதித்தான். காத்தமுத்து விட்டுக்கொடுக்காமல் "நீ சாமியே இல்லடா. நான் கடலையாண்டி - நீ பூச்சாண்டி" என்று நையாண்டி செய்தான். ரத்தினம் அரிவாளை ஓங்க, பதிலுக்குக் காத்தமுத்துவம் அரிவாளை ஓங்க, கூட்டம் எழுந்தது. ரத்தினத்தின் பங்காளிகள் "அவன்தான் ஒரிஜினல் சாமி' என்று வாதாட, காத்தமுத்துவின் சொந்தக்காரர்கள் 'அவன்தான் அசல் கடலை மாடசாமி' என்று கட்சியாடினார்கள். வாதம் பிடிவாதமாகிக் கைகலப்பு ஏற்படும் நிலை. "என்னைப் பார்த்துப் பாடு' என்று காத்தமுத்து கத்த, வடிவு நடுங்கிக்கொண்டே பாடத் தொடங்கினாள். உடனே ரத்தினம் உரித்த தேங்காய் ஒன்றை எடுத்துத் தன் தலையில் அடித்து உடைத்தான். "நான்தான் உண்மையான மாடன்...என்னப் பாத்துப் பாடல. உன் தலைய வெட்டி.." என்று மிரட்டினான். வடிவக்குக் குலை நடுங்கியது. பார்ப்பவர்கள் திகைத்து நின்றனர். ஐயாசாமிக்குப் பொறுக்கவில்லை "மடப்பய புள்ளைகளா, முதல்ல கூச்சலை நிறுத்துங்கடா" என்று கத்தினார். கூட்டம் கேட்கவில்லை. "ரத்தினம் ஆடுவதே சுடலைமாடன்' "காத்தமுத்துவே சுடலைமாடன்" என்ற கோஷங்கள் வலுவடைந்தன. இந்த அமளியில் இதர சாமியாடிகளும் இரண்டு கோவிஷ்டிகளாகப் பிரிந்து இவன்தான் அசல் சுடலை 'அவன் தான் நிஜமான சுடலை என்று சர் டிபிகேட் கொடுத்தார்கள். ஆனால், உதிரமாடசாமியாடி தன் பீடத்தில் இருந்து அங்கு வந்து, ஒரு கோஷடியோடு ஒன்றிப்போன 'அம்மன் சாமி'யைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு "இவங்க ரெண்டு பேருமே கடலையில்லை, பேயுங்க" என்றார். உடனே மூன்றாவது கோஷ்டி ஒன்று உருவாகி,