பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டுத் தலை அந்தக் கம்பெனியின் பிராஞ்ச் மானேஜர் தங்கசாமி தங்கமான மனிதர். அவர் பேசுவது. அவருக்கே கேட்காது. அந்த அளவுக்கு மெதுவாகப் பேசுவார். சாந்த சொருபி, சன்மார்க்க சீலர், நேர்மையின் திலகம். காரில் இருந்து இறங்கியதும், தனது சூட்கேலை பியூன் எடுத்துக் கொண்டு வரவேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார். ஊழியர்கள் காண்டின் போய்விட்டு, கண்ட கண்ட நேரத்திற்கு வந்தாலும்,'கண்டுக்க' மாட்டார். கரெக்டாகப் பத்து மணிக்கு வந்து, கறாராக ஐந்து மணிக்குப் போய்விடுவார். இடியே விழுந்தாலும் இதில் மாற்றம் கிடையாது. ஊழியர்கள் எழுதி வைக்கும் பைல்களை, மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு, கையெழுத்துப் போட்டுவிடுவார். சில சமயம் இல்லஸ்தரேட்டட் வீக்லியைப் பார்த்துக் கொண்டே, கையெழுத்துப் போடுவார். நேர்மைக்கு நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டு விடுவார். அதனால் நேரம் நிறைய இருந்தது. ஆகையால், தமிழ்ப்பத்திரிகைகளில் இருந்து, ஆராய்ச்சிப் புத்தகங்கள் வரை அவருக்கு அத்துபடி. இந்தத் தங்கமான மனிதரிடம் பணிபுரிய தவம் செய்திருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே, ஊழியர்கள் காண்டினில் தவம் கிடப்பார்கள். எத்தனையோ பழைய பெருச்சாளிகளையும், அவர்கள் கட்டிய வீடுகளின் மதிப்பு, வாங்குகிற சம்பளத்திற்கு 'டிஸ்புரபோஷனேட்டாகவும் இருப்பதை அறிந்த, அறிவித்த ஊழியர்கள், வாடகை வீட்டில் வாழும் அவரை விநோதமாகப் பார்ப்பார்கள். டில்லியில் இருந்து வரும் ஆபீசர்களை, அவர் விமான நிலையத்தில் போய் எதிர்பார்த்து, அவர்கள் பின்னால் ஆட்டுக்குட்டி மாதிரி அவர் அமைதியாகப் போவார். 'பிராப்ளம்' இல்லாத கிளை அலுவலகத்தைப் பார்வையிடுவதில், காஞ்சிபுரத்துப் பட்டுப் புடவை பிரியர்களான தில்லி ஆபீசர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. மொத்தத்தில் அந்த அலுவலகம் அமைதியாக நடந்து கொண்டிருந்தது. புயலுக்குப்பின் அமைதி ஏற்படுமோ என்னமோ, அங்கே நிலவிய அந்த அமைதிக்குப் பின் புயல் வீசத் தொடங்கியது. பண்டாரம், அங்கே அட்மினிஸ்டிரேட்டில் ஆபீசராக வந்து