பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 95 சேர்ந்தான். பம்பாயில் வேலை பார்த்து வந்த அவன், ஒரு நாள் அலுவலக விஷயமாக டாக்சியில் போவதாக வவுச்சர் போட்டான். அந்த வவுச்சரில் குறிப்பிடப்பட்ட டாக்சியின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர், ஒரு லாம்பரட்டா ஸ்கூட்டரின் நம்பர். இன்னொரு நாள் போட்ட வவுச்சரில், குறிப்பிடப்பட்ட ட்ாக்சியின் நம்பர், ஜெனரல்’ மானேஜரின் காரின் நம்பர். ஸ்கூட்டர் டாக்சியானதை மானேஜர் மன்னிக்கத் தயாராகத்தான் இருந்தார். ஆனால், தனது காரையே, அவன் டாக்சியாக்கியதும், அதனால் தன் பெயரும் அனாவசியமாக இழுக்கப்படும் என்பதை அறிந்த அவர், பண்டாரத்திடம் "ஜெயிலா? ராஜினாமாவா?" என்றார். மறு வார்த்தை பேசாமல் ராஜினாமாக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, பண்டாரம் சென்னைக்கு வந்தான். அவன் யோகம், இந்த வேலை உடனே கிடைத்து விட்டது. பண்டாரம் பழைய பைல்களை நன்றாகப் படித்தாள். வெளியே வேலை பார்க்கும் 'விற்பனை ஊழியர்களை அருமையாகக் கண்காணித்தான். அவர்கள் போட்ட வவுச்சர்களை' செக் பண்ணினான். அவள் எதிர்பார்த்தபடியே, ஒரு போலீஸ்வானின் நம்பர். ஒரு ஹெவி லாரியின் நம்பர் முதலியவை டாக்சி நம்பர்களாகக் காட்டப் பட்டிருந்தன. சம்பந்தப்பட்டவர்கள் வந்த போது அவர்களிடம் நாகுக்காக விசாரித்தாள். அவன் ஒருத்தன் மட்டும் அங்கே இல்லையானால், அவர்கள் வேலூருக்குப் போக வேண்டியிருக்கும் என்று விநயமாக எடுத்துரைத்தான். நேர்மைக்குத் தான் முதலிடம் கொடுப்பதாகவும், ஆத்ம நள்ைபர்களுக்கு, அதைவிட முதலிடம் கொடுப்பதாகவும் வாக்களித்தான். ஆத்ம நண்பர்கள் என்போர் ஐம்பது ரூபாய்க்கு மேல் 'தள்ளுபவர்கள்' என்றும் நட்புக்கு வியாக்கியானம் கொடுத்தான். ஆக, பண்டாரத்திற்கு நிறைய ஆத்ம நர்ைபர்கள் சேர்ந்தார்கள் ஒர் ஊழியர், ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கிளைக்கு மாற்றலாகி வந்தார். ரயிலில் இரண்டாவது வகுப்பில்தான் வந்தார். டி.எ.பில் போடும்போதும் இரண்டாவது வகுப்பு டிக்கெட்டுக்குரிய பணத்தைத்தான் எழுதினார் பண்டாரம் அவரை காண்டினுக்குக் கூட்டிக் கொண்டு போனாள். "என்ன ஸார் பிழைக்கத் தெரியாத ஆலா இருக்கிங்களே: பஸ்ட் கிளாஸில் வந்ததா போட்டால், குடியா முழுகி விடும்?"