பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 குற்றம் பார்க்கில் "ஐயையோ.. அது தெரிஞ்சா. ஆபத்தாச்சே!" ஆசாமி தெரிந்து விடுமே என்று தான் அஞ்சுகிறாரே தவிர, நாணயத்துக்காக அல்ல என்பதைப் புரிந்து கொண்ட பண்டாரம், அவருக்கு 'உலக அறிவை'ப் போதித்தான். எவன் யோக்கியள்? கம்பெனிக்கு மாடாக, மனிதனாக உழைக்கிறவர் இரண்டாவது வகுப்பை, முதல் வகுப்பாகப் போட்டால், என்ன தப்பு? அந்த ஆசாமியும் பண்டாரத்திடம் மயங்கி, முதல் வகுப்பையே காட்டி விடுவதாகக் கூறினார். அன்று பண்டாரமே ஹோட்டல் பில்லுக்கு' பணம் கொடுத்தான் ஒரு மாதம் கழித்து அவரிடம் அவன் பணம் கேட்டான். அவர் கையை விரித்தார். "பஸ்ட் கிளாஸ்ல நீங்க புறப்பட்ட தேதியில் யார் யாரெல்லாம் டிராவல் பண்ணினாங்கன்னு விசாரிக்க எவ்வளவு நேரம் ஆகும்? ஆத்ம நண்பராச்சேண்னு சும்மா இருக்கேன்" என்றாள் பண்டாரம் அந்த ஆசாமி, இப்போது பண்டாரம் சாப்பிடுவதற்கும் சேர்த்து 'பில்' கொடுப்பது இல்லாமல், அவர் கொடுத்திருக்கும் இதர பணத்தை வைத்து அவர் குடும்பத்தோடு ஹைதராபாத்துக்கு பத்துத் தடவைக்கு மேல், பிளேனில் சவாரி செய்திருக்கலாம். என்றாலும் அவர் இப்போது அவனுக்கு ஆப்த நண்பர். கம்பெனியின் சேல்ஸ் ரேப்சென்டேட்டிவ் ஒருவன் விற்பனைக்குத் தமிழ்நாடு முழுவதும் டூர் போய்விட்டு, டி.எ.பில் போட்டிருந்தான். பில் பணம் ஐநூறு ரூபாய்க்கு மேல் தேறும். பண்டாரம் கை ஊறியது அந்த ரெப்ரசென்டேட்டிவ்வைப் பார்த்ததும் "ஜமாய் ராஜா உன் காட்ல மழை பெய்யுது. இந்த டுர்ல முந்நூறு ரூபாயாவது தேறியிருக்குமே? பரவாயில்ல, நீயும் நல்லா இருக்கணும், நானும் நல்லா இருக்கணும்" என்றான் விற்பனையாளன், டூரில் இருந்தபோது வயிற்றுவலியில் தவித்து, சரியாகச் சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டவன் வந்ததும் வராததுமாகப் பண்டாரம் இப்படிப் பேசியது. அவனிடம் குணமாகிய வயிற்று வலி மீண்டும் எட்டிப் பார்த்தது. அந்த ஆத்திரத்தில், "என்ன மிஸ்டர் பண்டாரம், அவனவன் வயித்து வலியுல அவஸ்தப்பட்டு, நாயா அலைஞ்சிட்டு வரான். நீங்க, ஜோக் பன்றீங்க இந்த மாதிரி வேலையெல்லாம் நம்மகிட்ட வேண்டாம்" என்று பத்துப்பேர் முன்னிலையில் பகிரங்கமாகச் சவால் விட்டான்.