பக்கம்:குற்றால வளம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

வகுப்பு

 எவருக்கும் எவரும் தாழ்ந்தவர் உயர்ந்தவர் அல்லர். எல்லோரும் பிறப்பினால் ஒத்தவர் என்ற உண்மை உணர்வு பெறவேண்டும்.

ஒரு கூட்டத்தார் தங்களைவிட உயர்ந்தவர்கள் என்று சாற்றிக்கொள்பவரோடு சண்டையிட்டு அவர்களைத் தங்களோடு சமமாக வரும் படி அழைக்கிறார். தங்களுக்குத் தாழ்ந்தவர்களாகத் தாங்கள் கருதுபவர்களைத் தங்களோடு சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. இது பெரிய மூடத்தனம். வேறு சில கூட்டத்தார் தாங்களும் பிராமணராகிவிட விரும்புகிறார். தங்கள் பெயருக்குப் பின்னே பிராமணர் என்று சேர்த்துக்கொள்கிறார், செளராஷ்ட்ரப் பிராமணர் விஸ்வப் பிராமணர் அந்தப் பிராமணர் இந்தப் பிராமணர் என்று கூறிக் கொள்கிறார். எல்லோரும் இப்படிக் கூறிக் கொள்வதால் யாது பயன்? பிறப்புப்பற்றி வகுப்பு என்ற மாயையுைக் கொல்வதற்கு இது வழியாகாது.

பிறப்பினாலே பிராமண ரென்பார் உயர்வு என்ற எண்ணம் இவர்கள் உளத்தை விட்டகலவில்லை. அதனாலேயே அப்பெயரில் இவ்வளவு மோகங் கொண்டுள்ளார். பிராமணர் என்று தனனை நினைத்துக்கொண்டிருப்பவர் தன்னைத் தான் உயர்வு என எண்ணிக் கொண்டிருத்தல் ஒரு வியப்பன்று. அவர் உயர்வென மற்ற வருங் கருதுதலே முட்டாள்தனம். தான் உயர்வெனக் கருதிக் கொண்டிருக்கும் ஒருவரைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/101&oldid=1534958" இலிருந்து மீள்விக்கப்பட்டது