பக்கம்:குற்றால வளம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

93

 குறை கூறுதற்கு ஒன்றுமில்லை, மற்றவர் புத்தியோடு நடந்துகொண்டால் யாவும் ஒழுங்காக வந்துவிடும். பிறரை இகழவேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவரும் தத்தம் நீர்மையைத் தாங்கள் அறிந்து தக்கபடி நடந்து கொண்டால் உயர்வு தாழ்வு என்ற கொள்கை தானே பறந்துவிடும். எதற்கும் பிறரைக் குறை கூறுதல் நலமன்று. வகுப்பு, பிறப்பினால் அல்ல என்பதை மக்கள் உணருமாறு செய்கையில் காட்டவேண்டும்.

வகுப்பு இன்று கொள்ளப்பெறும் நிலையில் இருக்குமானால் அதற்குப் பொருள் சிறிதுமில்லை. இப்பொழுது வகுப்புக்களெல்லாம் செயலில் கலந்துவிட்டது. வெளியே மட்டும் வகுப்பு வகுப்பென்று பேசிக்கொள்ளப்படுகிறது. எல்லாத் தொழிலையும் எல்லோரும் செய்கின்றார், பிறப்புக் கொண்டு வகுப்புப் பேசிக்கொள்கிறார். எத்துணை தலைமுறைக்கு முன்னர் அவ் வகுப்புக் குரிய தன்மை அவர் பரம்பரையை விட்டகன்றது என்பதை அறிய முடியா நிலைமையில் அவ் வகுப்புப் பெயரைச் சொல்லிக்கொள்வதை விட்டபாடில்லை.

பண்டை முறையில் கொள்வதானால் இன்று ஒவ்வொருவரையும் தனித்தனியே பொறுக்கிப் புதிதாகச் சேர்க்கவேண்டியதாகவே உளது இன்றைய தினம் மக்கள் உடல் பெற்றோரை யெல்லாம் மனிதர்கள் என்ற ஒரே அளவில் வைத்து இப்பொழுதிருக்கிற வகுப்பை மறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/102&oldid=1534959" இலிருந்து மீள்விக்கப்பட்டது