பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

35


தலைவருக்கு, இந்தக் குறிப்பினை முதலிலேயே கொடுத்து விட வேண்டும்.

4.6. நரியாரே! நேரம் என்ன? (What is the time Mr. Fox?)

குழந்தைகளின் ஒருவர் நரியாகவும்; மற்றொருவர் தாய்க் கோழியாகவும்; மீதியுள்ள குழந்தைகள் அனைவரும் கோழிக்குஞ்சுகளாகவும், விளையாடுமாறு கூறிவிட வேண்டும்.

ஆடுகிற மைதானத்தில், ஒரு எல்லையில் ஒரு கோடும், மற்றொரு எல்லையில் ஒரு கோடும் போடப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு எல்லைக் கோடு நரியின் இடம் மற்றொரு எல்லைக் கோடு, கோழிகளின் இடம். இடைப்பட்ட இடத்தில் கோழிக்குஞ்சுகள் மேய்ந்து கொண்டிருப்பது போல, நடந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆசிரியர் விளையாடுங்கள் என்று கூறியவுடன், கோழி தன் குஞ்சுகளை அழைத்துக்கொண்டு, எல்லைக் கோட்டின் மேல் நிற்கும் நரியிடம் செல்ல வேண்டும்.

சென்றவுடன், தாய்க்கோழியானது, நரியாரே! நேரம் பன்ன? என்று கேட்க வேண்டும்.

இப்பொழுது காலை, மத்தியானம், சாயங்காலம், என்று ஏதாவது ஒரு பெயரை நரிசொல்லிக் கொண்டே