பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


போட்டியிடுகிற இருவரும் குழிக்கு 3 அடி தூரம் தள்ளி, நின்று கொண்டிருக்க வேண்டும்.

தள்ளுங்கள் என்று கூறியவுடன், ஒருவரை மற்றொருவர் இழுத்து வந்து, குழிக்குள் (வட்டத்திற்குள்) தள்ளிவிடவேண்டும். தான் குழிக்குள் வந்து (தெரியாமல்) விழுந்து விட்டால் கூட அவர் தோற்றவராகிறார்.

எதிரியை குழிக்குள் இழுத்து வந்து தள்ளி விடுகிறவரே, வெற்றி வீரர் ஆகிறார்.

7. உடல் நலம் (Health)

சில நன்மைகள்

உடல் நலத்தை குழந்தைகளுக்குப் போதிப்பதால் உண்டாகும் நன்மைகள்

7.1. உடல் நலம் பற்றிய அறிவில் தெளிவு ஏற்படுகிறது.

7.2. உடல் நலத்திற்காக உதவுகின்ற பழக்க வழக்கங்களின் தன்மைகளும், உண்மைகளும் அவர்களுக்கு புரிகிறது.

7.3. தான் நலத்துடன் இருக்க வேண்டிய அவசியம் பற்றி அறிந்து கொள்வதுடன், அதுவே சமூக நலமாகவும் அமைந்து விடுகிறது என்பதையும் அறிந்து, அதற்கேற்ப நடந்து கொள்ள முடிகிறது.