பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

59


இயக்கத்திலும் அழகும், லயமான அமைப்பும், இதமான தோற்றச் செழிப்பும் உள்ளதாக உடலை மெருகேற்றி விடுகிறது.

தாளலயப் பயிற்சிகளில் கிராமிய நடனமும் (folk dance) ஒன்று.

சிறுமிகள் கிராமிய நடனத்தில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமானதாகும்.

அவர்கள் வாழ்கிற நாட்டில் உலவுகிற ஒரு கிராமிய நடனமும், மற்றும் தேசிய அளவில் ஒரு நாட்டின் கிராமிய நடனமும் கற்றுக் கொள்கிற வாய்ப்பை ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.

2.1. தமிழ்நாட்டு கிராமிய நடனங்கள் (Folk dance)

1. ஒயில் ஆட்டம்.

2. கும்மி.

3. கோலாட்டம்

கிராமிய நடனங்கள் இடத்துக்கு இடம் வேறுபட்டு விளங்குவதால், அந்தந்த வட்டாரப்பகுதியில் உள்ள ஆசிரியப் பெருமக்கள், அங்கே பழகுகிறவற்றைப் பயிற்றுவிக்கவும்.

3. பாவனைகள்: போலிக் குரலெழுப்புதல், கதை நாடகங்கள்