பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தால், அதைக் கழற்றி விட்டுத் தான் ஆட வேண்டும். கண்ணாடியுடன் ஆடுவது நல்ல தல்ல.

விளையாட்டு உதவிப் பொருட்கள் பழுதாகி இருந்தால், அதை எடுத்து விளையாடக்கூடாது.

சிறந்த பாதுகாப்பு சாதனங்களை அணிந்து கொண்டு தான் ஆட வேண்டும்.

விளையாடும் நேரங்களில், மிகவும் கவனத்துடனும், பொறுப்புடனும் விளையாடவேண்டும் என்று குழந்தைகளைத் தூண்டவேண்டும்.

7.3.4 விபத்தும் முதலுதவியும் (Accidents and first Aid)

விளையாடும் பொழுதோ அல்லது வகுப்பில் இருக்கும் பொழுதோ காயம் பட்டாலும் அல்லது விபத்து நேர்ந்தாலும், உடனே அதை ஆசிரியர்களிடமோ அல்லது பெரியவர்களிடமோ சென்று சொல்லுகிற பழக்கத்தை, பண்பாட்டைக் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.

விபத்து நடந்து விடுகிறபொழுது, காலதாமதப்படுத்தக் கூடாது. அதற்காக, அவர்களே முதலுதவி செய்யவும் முயற்சிக்கக் கூடாது.

விபத்து நடைபெறுகிறபொழுது, கலங்கிப் போய்விடாமல், எப்படி நடந்து கொள்ள வேண்டும்