பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பூனை பெங்குவின் 37 மான்க்ஸ் பூனை பாரசீகப் பூனை வீட்டுப் பூனை பூனையின் பாதங்கள் செத்தைபோன்று மிருதுவானவை. எனவே பூனை சத்தம் செய்யாமல் சென்று இரையைத் தாவிப் பற்றுகிறது. பூக்கயின் கால்கனில் கூர்மை யான நகங்கள் உள்ளன. இந் நகங்களை இது வேண்டும்போது நீட்டி, மற்ற வேளை களில் உள்ளே இழுத்துக்கொள்ளும். பூனையின் காதுகள் மிகக் கூர்மையானவை. பூனைக்கு மோப்ப சக்தியும் அதிகம். பூனை உயரத்திலிருந்து தலைகீழாக விழுந்தாலும் அது தரையில் மோதுவதற்கு முன்பே உடலைத் திருப்பிக் கால்கள் தரையில் ஊன்றுமாறு செய்துகொள்ளும் நிறமை வாய்ந்தது. இதன் கால்கள் குட்டையாக வும் உறுதியாகவும் இருப்பதால் பூனைக் குத் தீங்கு நேர்வதில்லை. உயர்ந்த சுவர் கன்மீது இது தாவி ஓடும்; மரங்களில் விரைவாக ஏறும். சில பூனைகள் நீந்தக் உ கூடியவை. பூனை ஒரு தடவைக்கு மூன்று அல்லது நான்கு குட்டிகள் போடும். குட்டி சில நாட்கள்வரை கண் திறக்காது. குட்டி களைத் தாய் மிகுந்த பரிவுடன் பாதுகாக் கும். ஆண்பூனை சில சமயங்களில் குட்டி களைத் தின்றுவிடுவது உண்டு. எனவே, குட்டிகள் இருக்குமிடத்தைத் தாய்ப்பூனை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கும். பூனை சுமார் 15 ஆண்டுகள் வாழும். பூனைகளில் பலவகை உண்டு. பாரசீகப் பூனைகளுக்கு மிருதுவான நீண்ட உரோமம் இருக்கும். வால் அடர்த்தியாக, மிக அழகாக இருக்கும். சீயம் பூனைகள் மிக அழகானவை. குட்டியாக இருக்கும்போது முற்றிலும் வெள்ளையாக இருக்கும். வளர்ந்த பிறகு இவற்றின் முகம், காது, கால்கள், வால் நுனி முதலியன கறுப் பாசுவோ சாக்கலேட் நிறமாகவோ மாறி விடும். மான்க்ஸ் என்ற இனப் பூனைக்கு வால் இல்லை. காட்டுப்பூனை என்று ஒரு வகை உண்டு. இது காடுகளில் வாழும். வீட்டுப்பூனையைவிட இது உருவில் பெரியது. சாம்பல் நிறமாக இருக்கும். புனுகு என்னும் வாசனைப் பொருளைக் கொடுப்பது புனுகுப்பூâ. ஆனால் இது பூனையின் இனத்தைச் சேர்ந்தது அல்ல. பெங்குவின்: பறவைகளில் பறக்க முடியாதவை சில உள்ளன. நெருப்புக் கோழி (த.க.), கீவி (த.க.), ஈமு முதலிய வற்றால் பறக்க முடியாது. எனினும் இவை வேசுமாக ஓடும். ஆனாய் பறக்க முடியாம லும் வேகமாக ஓட முடியாமலும் உள்ள பெங்குவின் பறவைகள்