பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 பெங்குவின் - பெட்ரோலியம் ஒரு பறவை உண்டு. அதுதான் பெங் குவின். பெங்குவின் ஒரு விந்தையான பறவை. இதன் உடல் பெரியது. இறக்கை கள் சிறியவை: எனவே இப்பறவையால் பறக்க இயலாது. ஆனால் தன் இறக்கை களைத் துடுப்புபோலப் பயன்படுத்தி இது தண்ணீரில் மிக வேகமாக நீத்தும். பெங்குவினின் கால்கள் மற்ற பறவை களைப் போலன்றி சிறிது பின்னோக்கித் தள்ளி அமைந்துள்ளன. ஆகையால் இது கால்களை ஊன்றி, நிமிர்ந்து நடந்து செல்ல முடிகிறது. ஆனால் வேகமாக ஓட முடியாது. இது தள்ளாடித் தள்ளாடி நடந்து செல்வதைப் பார்க்க வேடிக்கை யாக இருக்கும். தென் துருவத்திலும், ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து, தென் ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா முதலிய பகுதிகளிலும் பெங் குவின் வாழ்கிறது. இப் பறவையில் பல இனங்கள் உள்ளன. இவற்றுள் தென் துருவப் பகுதியில் வாழும் அரச பெங் குவின் பெரியது. இது ஒரு மீட்டர் உயர மிருக்கும். நியூஜீலாந்தில் காணப்படும் நீல நிறப் பெங்குவின் சீறியது. இது அரை மீட்டர் உயரமே இருக்கும். பெங்குவினின் முதுகுப்புறம் கருப்பாகவும் அடிப்புறம் வெளுப்பாகவும் இருக்கும். செதில் போன்ற சிறிய இறகுகள் உடல் முழுதும் உள்ளன. வால் இறகுகள் குட்டை யானவை. மீன்களையும் கடலில் வாழும் மற்ற சிறு உயிரினங்களையும் பெங்குவின் உண்ணும். முட்டையிடும் காலத்தில் இப்பறவை கள் கூட்டம் கூட்டமாகக் கரைக்கு வருகின்றன. இவை கூடு கட்டுவதில்லை. தரையிலோ பாறைமீதோ முட்டையிடு கின்றன. அரச பெங்குவின் ஒரே ஒரு முட்டையிடும். மற்ற இனங்கள் ஒன்று அல்லது இரண்டு முட்டையிடுகின்றன. அரச பெங்குவின் அடைகாக்கும் முறை வித்தையானது. இந்த இனத்தில் ஆண் புறவையே அடைகாக்கும். இது முட்டை யைக் கால்களின் மேல் வைத்துக்கொண்டு அதை மூடி மறைத்து உட்கார்ந்துகொள் கிறது. குஞ்சு பொரிக்க எட்டு வாரங் சுனாகும். இந்த எட்டு வாரங்களும் ஆண் பறவை இரை உட்கொள்ளாமல் அடை காக்கும். குஞ்சு பொரித்ததும் பெண் பறவை கரைக்கு வந்து குஞ்சுக்கு உணவு ஊட்டுகிறது. பிறகு ஆண் பறவை இரை தேடச் செல்லும். மற்ற இனங்களில் ஆண், பெண் இரண்டுமே முட்டை மீது உட்கார்த்து அடைகாக்கின்றன. பெங்குளினை எனிதில் பழக்கலாம். வளர்ப்பவரிடம் இது அன்பாக இருக்கும். பெங்குவின் சுமார் 35 ஆண்டுகள் வாழும். பெட்ரோலியம் : விமானம் பறப் பதற்குப் பெட்ரோல் தேவை. மோட்டார் வண்டிகள் ஓடுவதற்குப் பெட்ரோல் அல்லது டீசல் எண்ணெய் வேண்டும். சில வீடுகளில் அடுப்பு - வினக்கு எரிப் மண்ணெண்ணெயைப் பதற்கு படுத்துகிறார்கள். இந்த எண்ணெய்கள் கிடைக்கின்றன எங்கிருந்து எல்லாம் பயன் தெரியுமா? பூமியின் அடியிலிருந்து எடுக்கப் படும் பெட்ரோலியத்திலிருந்துதான் இவை பெட்ரோலியம் யாவும் கிடைக்கின்றன. என்ற சொல்லுக்கும் எண்ணெய் (Rock oil) என்று பொருள். கல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாய் கடலில் வாழ்ந்த உயிரினங் களும், தாவரங்களும் இறந்தபின் அடிமட் டத்திற்கு ஆழ்ந்து மண்ணில் புதைந்தன. இதன்மீது மண்ணும். மணலும் மற்ற கடல் பிராணிகளின் ஓடுகளும் அடுக்கடுக் காகப் படிந்து களிமண் பாறைகளும், மணற்பாறைகளும், சுண்ணாம்புப் பாறை களும் உண்டாயின. இவை மிகுந்த வெப் பத்திற்கும் அழுத்தத்திற்கும் உட்பட்டன். பின்னர் பூமியின் மேற்பகுதியாகிய புறணியில் ஏற்பட்ட பல மாறுதல்களால், கடலின் அடியிலிருந்த இந்தப் பாறைகள் உயர்ந்து நிலப்பகுதிகளாயின. இப்பாதை களின் அடியில் சிக்கிய உயிரினங்கள் தாவரங்கள் இவற்றின் எச்சங்கள் சிதைந்து பெட்ரோலியமாக மாறியிருக்கவேண்டும். என்று ளிஞ்ஞானிகள் கருதுகின் ஐனார். பெட்ரோலியத்தோடு இயற்கை வாயுவும் (Natural gas, த.க.) பூமியின் அடியில் இருக்கிறது. இருதாறு ஆண்டுகளுக்குமுன் இங்கி லாந்து நாட்டில் தொழிற்புரட்சி ஏற் பட்ட பின்புதான் பெட்ரோலியத்தின் பெட்ரோலியத்தில் அடங்கியுள்ள பல்வேறு பொருள்கள், 'வடித்துப் பகுத்தல்' என்னும் முறையில் பிரித்தெடுக்கப்படுகின்றன. பெட்ரோலியம் ஆவி மண்ணெண்ணெய் டீசல் எண்ணெய் எரி எண்ணெய் பெட்ரோல் தார்