பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 முயல் - முருகன் வளரும். பூக்கள் இளஞ் சிவப்பு நிறத்தில் சிறியதாகக் கொத்துக் கொத்தாகப் பூக்கும். நாம் கொட்டை என்று சொல் வதுதான் இம் மரத்தின் உண்மையான கனி. பூவின் காம்பு தடித்து, மென்மை யான சதைப்பற்றுள்ளதாக வளரும்; மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்திலிருக்கும். இதையே நாம் பழம் என்று சொல்கிறோம். இது உண்மையான கனி இல்லையாதலால் இதனைப் பொய்க் கனி (Pseudo fruit) என்று சொல்வர். இதில் இனிப்பும் கரகரப் பும் உள்ள சாறு இருக்கும். இதைத் தின்ன லாம். பழச் சாறு செய்வதும் உண்டு. கொட்டையின் மேல்ஓடு கடினமாகவும் சிறுசிறு அறைகள் உள்ளதாகவும் இருக் கும். இதில் எண்ணெய் போன்ற பால் இருக்கும். இது நம் உடலில் பட்டால் அந்த இடம் வெந்துபோகும். மெருகு எண்ணெய் (Varnish), தளவரிசை ஓடுகள், நீரில் நனையாத காகிதம், கோந்து, மை, மெழுகுத் துணி முதலியன தயாரிக்க இந்த எண்ணெய் உதவுகிறது. உண்டு. முயல்: முயலைப் பற்றிய பல கதை களை நீங்கள் படித்திருப்பீர்கள். இது மிகவும் தந்திரமுள்ள சிறு பிராணி, முயல்களில் இரண்டு வகை ஒன்று, காட்டுமுயல் (Hare), மற்றொன்று குழிமுயல் (Rabbit), காட்டுமுயல் உருவில் சற்றுப் பெரியது. இது பழுப்பு நிறமாயிருக் கும். மற்ற விலங்குகள்போலன்றி, இதன் மேலுதடு பிளவுபட்டிருக்கும். காதுகன் நீளமானவை. அவற்றை எந்தத் திசை யிலும் இது திருப்பும். சிறு ஒலி கேட் டாலும் அதை அறிந்து ஓடிவிடும். இதற்கு மோப்ப சக்தியும் பார்வைத் திறனும் மிக அதிகம். இதன் முன்கால்களைவிடப் பின் கால்கள் நீளமானவை. இதனால், பின்கால் களை உந்தித் தள்ளி மிக வேகமாகக் குதித் துக் குதித்து ஓடும். வேட்டைநாய்கள் துரத்தும்போது, பல தந்திரங்களைக் கடைப்பிடித்து, விரைவில் தப்பி ஓடிவிடும். புல்பூண்டுகள், தானியங்கள், மரப் பட்டைகள் முதலியவற்றை இது தின்னும். குழி முயல் காட்டு முயல் அவற்றைக் கொறித்துத் தின்பதற்கேற்ப இதன் பற்கள் கூர்மையாக இருக்கும். பற்கள் தேயத்தேய மீண்டும் வளரும். தோட்டங்களுக்கும் வயல்களுக்கும் முயல் மிகுந்த சேதம் விளைவிக்கிறது. தானியங் கள் முளைக்கும்போதே இரவில் வந்து அவற்றைத் தின்றுவிடும். இது ஆண்டுக்கு மூன்று நான்கு தடவை குட்டிபோடும். ஒரு தடவைக்கு நான்கு ஐந்து குட்டிகள் பிறக்கும். காட்டு முயலை மக்கள் வேட் டையாடி உண்பர். குழிமுயல் அதன் பெயருக்கேற்பக் குழி தோண்டி அதில் வாழும். பகலில் அக் குழியில் பதுங்கியிருந்து அதிகாலையிலும் மாலையிலும் இரைதேடும். இது ஓராண்டில் ஏழு அல்லது எட்டுத் தடவை குட்டி போடும்; ஒரு தடவைக்கு ஆறு ஏழு குட்டி கள் பிறக்கும். இவ்விதம் இது விரைவில் பெருகிவிடும். சில குழிமுயல்கள் உடல் வெண்மையாக முழுவதும் இருக்கும். மற்ற நிறங்களிலும் சில உள்ளன. குழி முயல்களை வீட்டில் செல்லப் பிராணியாக வளர்ப்பார்கள். இது குதித்துக் குதித்து ஓடுவதைக் காண வேடிக்கையாக இருக் கும். சில வகைக் குழிமுயல்களை அவற்றின் உரோமத்திற்காக வளர்க்கிறார்கள். இவற் னுள் அங்கோரா என்ற இனம் முக்கிய மானது. இதன் நீண்ட உரோமங்களைக் சுத்தரித்து, இழையாகச் செய்து ஆடை நெய்கிறார்கள். மென்மயிர் ஆடை (Fur) தயாரிக்கவும், தொப்பிகள் (Felt Hats) செய்யவும் குழிமுயல்களின் தோல் பயன் படுகிறது. இறைச்சிக்காகவும் சிலவகைக் குழிமுயல்களை வளர்க்கினர்கள். முர்ரே-டார்லிங் ஆறுகள்: ஆஸ் திரேலியாக் கண்டத்தில் பாயும் பெரிய ஆறுகள் முர்ரே, டார்லிங். இவை, கண் டத்தின் நிழக்குக் கரையோரமுள்ள மலைத் தொடரில் உற்பத்தியாகின்றன. இரண் ரும் மில்டூரா என்னுமிடத்திற்கு அருகில் இணைந்து பிறகு இந்திய சமுத்திரத்தில் கலக்கின்றன. ஆஸ்திரேலியாவில் தென்கிழக்குப் பகுதி யின் செழிப்புக்கு இந்த இரண்டு ஆறு களுமே காரணம். நீர்ப்பாசனத்திற்கு இவை பெரிதும் உதவியாக உள்ளன. இந்த ஆறுகளின் குறுக்கே பெரிய அணை களைக் கட்டி நீரைத் தேக்கிவைத்து வேளாண்மை செய்கின்றனர். அணைகளின் மூலம் மின்சாரமும் உற்பத்தி செய்யப் படுகிறது. முருகன்: இந்துக்கள், குறிப்பாகத் தமிழர்களில் பெரும்பாலோர் வணங்கும்