பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முருகன் - முருகன் - முருங்கை வைத்தீசுவரன் கோயிலிலுள்ள சிலை கடவுள் முருகன். 'முருகு' என்ற சொல் அழகு, இளமை, மணம் என்றெல்லாம் பொருள்படும். முருகனுடைய வரலாற்றைப் பழந் தமிழ் நூல்கள் ஒருவாறும், கந்தபுராணம் முதலிய பிற்கால நூல்கள் வேறுவிதமாக வும் கூறுகின்றன. பலரால் ஏற்றுக் கொள்ளப்படுவது கந்தபுராண வரலாறே. சூரபதுமன் முதலிய அசுரர்களின் கொடு மையைத் தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். பின்னர் சிவன் ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். வாயுவும் அக்கினியும் அவற்றை கங்கையில் விட்டனர். கங்கையில், சரவண மடுவில் கடம்ப மர நிழலில் தங்கிய அந்த ஆறு தீப்பொறி களும் ஒரு குழந்தை உருவம் கொண்டன. கார்த்திகைப் பெண்கள் அறுவரில் ஒவ்வொருவரும் அக் குழந்தையைத் தாமே வளர்க்க விரும்பியதால் அக் குழந்தை ஆறு குழந்தைகளாகியது. சிவன் இக் காட்சியை உமாதேவிக்குக் காட்டினார். தேவி, ஆறு குழந்தைகளையும் ஒன்றாய் எடுத்து அணைக்க, ஆறு முகங்களும் பன்னிரண்டு திருக் கரங்களும் கொண்ட ஆறுமுகனாய்த் தோன்றினர் முருகன், தேவர்களின் சேௗபதியாகச் சென்ற முருகன் சூரபதுமனுடன் போரிட்டு அவனை வேலால் பிளந்தார். இறவா வரம் பெற்றிருந்த சூரபதுமன், சேவலும் மயிலு மாகி நின்றன். சேவல் முருகனுக்குக் கொடியாயிற்று; மயில் வாகனமாயிற்று. சூரபதுமனை வென்றவுடன் தேவர்களின் தலைவனாகிய இந்திரன் மிக மகிழ்ந்து. தான் வளர்த்த தெய்வயானையை முருகனுக்குத் திருப்பரங்குன்றத்தில் 41 திருமணம் செய்து வைத்தான். பின்னர் முருகன் வள்ளிமலைச்சாரலில் வேடர் களிடம் வளர்த்துவந்த வள்ளியைத் தாமே தேடிச் சென்று திருமணம் செய்துகொண்டு திருத்தணிகை (நிருத்தணி) சென்றமர்த் தார். முருகனின் ஆயுதம் வேல்; வாகனம் மயில்; திருமுருகாற்றுப்படை, திருப்புகழ். கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, அனுபூதி,திருவகுப்பு. சுந்தர் கலிவெண்பா முதலிய நூல்கள் முருகன் புகழை எடுத்துக் கூறுகின்றன. திருமுருகாற்றுப்படையில் கூறப்பட் டுள்ள திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி (பழநி), குன்று தோறாடல் (மலைத் தலங்கள்), திருவேரகம் (சுவாமிமலை). பழமுதிர்சோலை (அழகர் மலை) ஆகிய ஆறு இடங்களும் முருகனுக்கு மிக உகந்த இடங்கள். இவற்றை 'ஆறு படைவீடுகள் என்பர். இவை தவிரத் தமிழ்நாட்டில் முருகனுக்கென்று வேறு பல தனிக் கோயில்களும் உள்ளன. வட இந்தியாவில் முருகனைக் கார்த்திகேயன் என்னும் பெயரில் வழிபடுகின்றனர். இலங் கையில் (ஸ்ரீ லங்கா) கதிர்காமம் என்னு மிடத்தில் முருகன் கோயில் உள்ளது. சிவபெருமானே முருகனாக அவதரித்த தாகவும் கூறுவதுண்டு. முருங்கை : முருங்கைக் காயும் முருங் கைக் கீரையும் சுவையான கறி சமைக்க உதவும். முருங்கை மரம் சுமார் ஏழு மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் இலைகள் முருங்கை காய் இலை