பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 முள்ளம்பன்றி ஆண்டுக்கு ஒரு முறை முழுதும் உதிர்ந்து விடும். பின்பு புதிதாக இலைகள் துளிர்க் கும். இம் மரம் மிகவும் மென்மையானது. எனவே எளிதில் முரிந்துவிடும். முருங்கை மரம் இந்தியா முழுவதும் காணப்படு கிறது. இது வட ஆப்பிரிக்காவிலும் ஆசியாவில் வெப்ப மண்டலப் பகுதிகளி லும் வளர்கிறது. இதை வீட்டுத் தோட் உங்களில் வளர்ப்பதும் உண்டு. இம் மரத் தின் கிளைகளை வெட்டி நட்டுப் புதிய மரங் களைப் பயிர்செய்வார்கள். விதைகளிலிருந் தும் முருங்கையைப் பயிராக்குவார்கள். முருங்கை மரத்தின் இலைகள் மிகச் சிறியவை. பூச்சுள் வெள்ளை நிறத்தில் கொத்தாகப் பூக்கும். காய்களில் சோற்றுத் திசு நிறைந்திருக்கும். காய்கள் சுமார் 40 சென்டிமீட்டர் நீளமுள்ளவை. சிலவகை மரங்களில் குட்டையான காய்கள் காய்க் கும். மரத்தின் பட்டையும், இலையின் ஈர்க் கும், பூவும் மருந்தாகப் பயன்படுகின்றன. மரத்திலிருந்து ஒருவகைப் பிசினும் கிடைக் கிறது. முருங்கைக் காயிலும், முருங்கைக் கீரையிலும் புரதச்சத்தும், தாதுப்பொருள் களும், மிகச் சிறிதளவு கொழுப்புச் சத்தும் உள்ளன. வைட்டமின் A-யுடன் வேறு சில வைட்டமின்களும் உள்ளன. ஆனால் காயைவிடக் கீரையில் இவ்வகைச் சத்துகள் அதிகம். கலியாண முருங்கை என ஒருவகை உண்டு. இதை முள்முருங்கை என்றும் சொல்வார்கள். இது சுமார் 18 மீட்டர் உயரம்வரை வளரும். இந்தியாவில் இது காட்டு மரமாக வளர்கிறது. தோட்டங் களில் மிளகுக்கொடி, திராட்சை, மஸ் லிகை முதலியன படர்வதற்குக் கால் போன்று இம் மரம் பயன்படுகிறது. அழகுக் காகவும் இம் மரத்தை வளர்க்கிறீர்கள். இதன் பூக்கள் செந்நிறமுள்ளவை. இவற் றில் பூந்தேன் அதிக அளவில் இருக்கும். இம் மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கும் நார் கயிறு திரிக்க உதவும். இது இலேசான மரமாதலால் தெப்பம், படகு, கட்டுமரம் முதலியன செய்ய உதவும். முள்ளம்பன்றி: மிக விந்தையான ஒரு விலங்கு முன்ளம்பன்றி. இதன் உடலெங்கும் கூர்மையான, நீண்ட முட்கள் வளர்ந்திருக்கும்; உடல் பன்றி போல இருக்கும். அதனால் இதற்கு முள்ளம்பன்றி என்று பெயர். முள்ளம்பன்றியின் உடல் கருப்பும் பழுப்பும் கலந்த நிறமுள்ளது. தலையி லிருந்து வால் வரை, இதன் உரோமங்களே நீண்ட முட்களாக உள்ளன. நடுமுதுகி லும் இடுப்பிலும் உள்ள முட்கள் மிக முள்ளம்பன்றி நீளமானவை. முள், அடியில் கருப்பாக வும் நுனியில் வெண்மையாகவும் இருக் கும். நுனி மிகக் கூர்மையானது. முள்ளம்பன்றி மற்ற விலங்குகளுக்குத் தீங்கு செய்யாது. ஆனால் நாய், நரி போன்ற விலங்குகள் துரத்தினால் இது ஓடாமல் நின்று, தன் உடல் முட்களைச் சிலிர்த்து நிமிர்த்திக்கொள்ளும். அப்போது அவற்றிலிருந்து சுரகரவென்ற ஓசை எழும்பும். துரத்திய பிராணி இதைக் கண்டும் பயந்து அகலவில்லையென்றால், முள்ளம்பன்றி பின்னோக்கிச் சென்று அதன் மீது மோதும். அப்போது இதன் முட்கள் பகைவிலங்கின் உடலில் தைத்துவிடுகின் றன. முட்கள் உண்டாக்கும் காயங்கள், புண்ணாகிவிடுமாதலால் பிற விலங்குகள் இதனைத் தாக்குவதில்லை. பாம்பு தாக்க முயன்றால், இது பாம்பின் மீது விழுந்து, புரண்டு சுற்றிக்கொண்டு முட்களால் காயப்படுத்திவிடும்! று முள்ளம்பன்றி வளை தோண்டி அதில் வாழும். பகல் முழுதும் வளையில் பதுங்கி யிருந்து இரவில்தான் இரை தேடும். இது கொறிக்கும் பிராணி (த.க.) இனத்தைச் சேர்ந்தது. இளம் மரங்களின் வேர், பட்டை, கிழங்கு முதலியன இதன் உணவு. உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு என்றால் இதற்கு மிகவும் விருப்பம். அவற்றை உண்பதால் உழவர்களுக்கு இது நட்டம் விளைவிப்பதுண்டு. வட அமெரிக்காவில் வாழும் ஒருவகை முள்ளம்பன்றி மரத்தில் ஏறக்கூடியது. இலை, தளிர், காய் முதலியவற்றை இது பறித்துத் தின்னும். இதன் வால் நிள மானது. வாலினால் இது எதிரிகளைத் தாக் கும். முள்ளின் நுனிப் பகுதியில் உள் நோக்கி வளைந்த கொக்கி இருப்பதால்,