பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மூக்கு - மூங்கில் எதிரியின் உடலினுள் பாய்ந்த முட்களை எனிதில் எடுக்க இயலாது! மூக்கு: பலவித மணத்தையும் முகர நமக்கு மூக்கு உதவுகிறது. மூக்கினாலேயே தாம் மூச்சுவிடுகிறோம். மூச்சை உள்ளே இழுக்கும்பொழுது காற்று உள்ளே செல் இறது. எலும்பினலும், குருத்தெலும்பின் லும் ஆகிய சுவர் மூக்கை இரண்டு பகுதி களாகப் பிரிக்கிறது. மூக்கிலுள்ள இரண்டு துவாரங்களின் வழியாக உட்செல்லும் காற்று மூக்குத் துவாரங்களைக் கடந்ததும் இரண்டு மூக்குக் குழாய்கள் வழியாகத் தொண்டையின் மேற்பகுதியை. அடை. கிறது. பின்பு அங்கிருந்து தொண்டைக் குழாய் வழியாக நுரையீரல்களுக்குச் செல்கிறது. மூக்குக் குழாய் ஒவ்வொன்றின் உட் புறமும் ஈரமான மெல்லிய கோழைச் சவ் வினால் மூடப்பட்டிருக்கிறது. மூக்குத் துவாரத்தினுள் மெல்லிய மயிர்கள் உண்டு. காற்றிலுள்ள தூசி, நுரையீரல்களுக்குப் போகாமல் இவை தடுக்கின்றன. ஒவ்வொரு மூக்குக் குழாயின் மேற்புறத் திலும் மெல்லிய சவ்வு காணப்படுகிறது. இச்சவ்வில் பல நரம்பு அணுத் திரள்கள் உள்ளன. இவைதான் மணத்தை உணரக் கூடிய நரம்புகளின் (Olfactory nerves) நுனி கள். இத்தகைய நரம்பு அணுத் திரள்கள் மூக்கின் முன்பகுதியில் இல்லை. எனவே பொருள்களின் மணத்தை எடுத்துச் செல் லும் காற்று முன்பகுதியைக் கடந்து செல் லும்போது நமக்கு மணம் எதுவும் தெரிவ மூக்கு (வெட்டுத் தோற்றம்) மூக்கு எலும்பு மஈரம்புகள் உள்ள பகுதி குருத்தெலும்பினால் ஆன சுவர் சவ்வு மூக்குத் துளை 43 தில்லை. ஆனால் இக் காற்று, மணத்தை உணரக்கூடிய நரம்புகளின் நுனியைத் தொட்டுச் செல்லும்போது அது அவ் வுணர்ச்சியை மூளைக்கு எடுத்துச் செல் கிறது. குரல் நாண்களின் அதிர்வால் பேச் சொலி உண்டாகிறது என்று உங்களுக்குத் தெரியும். இந்த ஒலி தொண்டை, வாய், மூக்கு முதலிய இடங்களில் உள்ள காற் றிஞஸ் வளிமை பெற்று வெளிக் காற்றில் பரவுகிறது. எனவே நாம் தெளிவாகப் பேசுவதற்கும் மூக்கு உதவுகிறது. மூக்கில் சில நோய்கள் உண்டாகலாம். சனி பிடித்தால் மூக்குக் குழாய்களின் சவ்வுப் படலம் அழற்சியுறும். ஆகவே நோய் உண்டாகாதவாறு மூக்கைத் தூய் மையாக வைத்துக்கொள்ளவேண்டும். அழற்சியுற்றாஸ் உடனே சிகிச்சை பெற வேண்டும். ஏனைய உயிரினங்களுக்கும் மூச்சுவிடவும் மணத்தை அறியவும் மூக்கு பயன்படு கிறது. ஆனால் நீரில் வாழும் மீன், செவுள் சுனின் வழியாகவே மூச்சுவிடுகிறது. மூங்கில் : மக்களுக்கு மிகவும் பயன் படக்கூடிய தாவரங்களில் மூங்கிலும் ஒன்று. மூங்கிலைக் கொண்டு சாரம், ஏணி, தெப்பம்,பாய்மரம் முதலியன கட்டலாம். கூடை முடையலாம். கூடாரங்களுக்கு மூங்கில் ஆதாரக் கால்களாகப் பயன்படும். குடை, குடைக் காம்பு, விசிறி, விளையாட் டுப் பொருள்கள், குழல் போன்ற இசைக் கருவிகள் ஈட்டி, வில், தொப்பீ முதலியன வும் மூங்கிலால் செய்யப்படுகின்றன. நீரோடுங் குழாய், மேசை, நாற்காலி முதலிய பல பொருள்களையும் இதைக் கொண்டு செய்யலாம். மூங்கில் நீண்டு உயர்த்த மரமாக வளரக்கூடியதென்றாலும் இது பல் குடும் பத்தைச் சேர்ந்ததே ஆகும். இதில் சுமார் 500 வகைகள் உண்டு. வெப்பமண்டலப் பகுதிகளில் இந்தியா, இலங்கை, பர்மா, சீனா, ஜப்பான், தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் மூங்கில் வளர்கிறது. பருவ மழைக் காடுகளில் தான் இது செழித்து வளர்கிறது. இமய மலைத் தொடரில் 3,500 மீட்டர் உயரம் வரை மூங்கிற் காடுகள் உள்ளன. மிக வெப் பப் பகுதிகளில் மூங்கில்கள் தாழ்வான புதர்ச் செடிகளாகச் சிறுத்துவிடுகின்றன. மிகச் சிலவகை மூங்கில்கள் கொடிகனாகப் படர்வதையும் காணலாம். சிலவகை மூங்கில் மரங்கள் 35 மீட்டர் உயரம்வரை வளரும். அவற்றின் அடிப் பகுதி சுமார் 30 சென்டிமீட்டர் சுற்றள வுள்ளதாக இருக்கும். செழிப்பான