பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44 மூங்கில் - மூச்சு மூங்கிலால் செய்யப்பட்ட சில பொருள்கள் இடங்களில் மூங்கில் நாளொன்றுக்கு 30 சென்டிமீட்டர் நீளம் வளரக்கூடும். மூங்கிலில் பல கணுக்கள் உண்டு. மூங்கில் புதராக அடர்ந்து வளரும். ஒரு புதரில் 30 முதல் 100 மூங்கில் வரை இருக்கும். மூங்கிலில் பொதுவாக இரண்டு கணுக்களின் இடையே உள்ள பகுதி குழாயைப்போல இருக்கும். ஆனால் சில. இனங்களில் இவ்வாறு குழாய்போல இல்லாமல் கெட்டியாக இருக்கும். இவை கல்மூங்கில் எனப்படும். மூங்கில் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் வளர்ந்து முதிர்ந்த பின்பு அதை வெட்டிப் பயன் படுத்தலாம். மூங்கில் மிக உயரமாக வளரும்வரை கிளைகள் விடுவதில்லை. பின்பு சிறிய கிளைகள் அடர்த்தியாக வளரும். மூங்கில் பூக்கள் பச்சை நிறமானவை. இவை சிறிய கதிர்களாக அடர்த்தியாகக் காணப்படும். பூக்கனிலிருந்து தானியம்போன்ற விதை கள் கிடைக்கின்றன. மூங்கில்களில் பெரும் பாலானவை பல ஆண்டுகள் வாழ்ந்திருந்து ஒரே தடவை பூத்துப் பிறகு சிறிது காலத் தில் பட்டுப்போகும். சில இனங்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்துக்கொண்டு உயிர்வாழும். மற்றும் சில ஆண்டுதோறும் பூக்கும். மூங்கிலிலிருந்து எடுக்கும் மரக்கூழ் காகிதம் செய்ய உதவுகிறது. மூங்கில் இல கால்நடைகளுக்கு நல்ல தீவளம். மூங்கில் அரிசியைப் பஞ்சம் ஏற்படும் காலத்தில் சமைத்து உண்பார்கள். இளங் குருத்தை நீரில் ஊற வைத்தும், ஊறுகாய் போட்டும். சர்க்கரைப் பாகில் தோய்த்தும் உண்பதுண்டு. மூங்கிலின் கணுக்களிடையி லுள்ள நீர்வற்றி வேய்முத்து அல்லது மூங்கில் முத்து உண்டாகும். இதை மருந் தாகப் பயன்படுத்துவார்கள். மூச்சு: மூச்சுவிடாமல் நம்மால் உயிர்வாழ முடியாது. நாம் காற்றை உள்ளிழுத்துப் பின்னர் வெளிவிடுகிறோம். இதைச் சுவாசித்தல் என்கிறோம். விலங்கு களும் தாவரங்களும்கூடச் சுவாசிக்கின் றன. அவற்றுக்கும் அதற்கான சுவாச உறுப்புகள் உண்டு. சுவாச உறுப்புகள் யாவும் சேர்ந்து மூச்சு மண்டலம் எனப் படுகிறது. நமக்கு மூக்கு, குரல்வளை, தொண்டை, மூச்சுக் குழல், நுரையீரல் ஆகிய உறுப்பு