பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

46 மூட நம்பிக்கை - மூடுபனி என்று சிலர் அந்தப் நம்புகின்றனர். பொருளுக்குக் 'கண்ணேறு' பட்டுவிட்டது என்பர். இதைத் தவிர்க்கச் சில மந்திரங் களையும் பொருள்களையும் பயன்படுத்துவ துண்டு. புது வீடுகளிலும் பயிர்கள் செழித்து வளர்ந்த தோட்டங்களிலும் மனித உருவம்போல் பொம்மை ஒன்றைச் செய்து வைப்பார்கள். சோதிடத்தில் உலகெங்கும் மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இது விஞ்ஞான யுகம். இன்றைய விஞ்ஞானி கள் பலரும், மக்களில் சிலரும் இவற்றை நம்புவதில்லை. இயற்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இயற்கையான ஒரு காரணம் உண்டு என்றும், அதை அறிந்து நடந்தால் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். மூட நம்பிக்கை எல்லா நாடுகளிலும் இருக்கிறது. ஒரு நாட்டில் ஒரு வகையான மூடநம்பிக்கை இல்லாவிட்டாலும் வேறொரு வகையான மூடநம்பிக்கை இருப் பதைக் காண்கிறோம். விஞ்ஞானம் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளிலும் மூடநம்பிக்கைகள் உள்ளன. மக்களுடைய வளரவளர அறிவு இவ்விதமான நம்பிக்கைகள் குறைந்து கொண்டே வருவதை நாம் காண்கிறோம். மூடுபனி (Fog) : மப்புமந்தாரமற்ற இரவில் தரைக்குச் சற்று மேலுள்ள சூடான காற்றானது, தரைமட்டத்தி லுள்ள குளிர்ந்த காற்றிலுள்ள ஈரத்தை உறிஞ்சிக் குளிர்ச்சியடையும். ஒரு குறிப் பிட்ட அளவு குளிர்ச்சியடைந்ததும் அதற்கு மேல் ஈரத்தை உறிஞ்சமுடியாது. இந்த வெப்ப நிலையைப் 'பனிநிலை ' (Dew point) என்பர். பனி நிலைக்கும் கீழ் அக் காற் றின் வெப்பநிலை குறையுமானால், அதிலுள்ள நீராவி நீர்த் துளிகளாக மாறி மூடுபனியாகத் தரைமட்டத்தில் படிகிறது. நீரைவிட நிலப் பகுதி விரைவாகக் குளிர்ச்சியடைகிறது. நீர் நிலைகளிலிருந்து நீராவி நிரம்பிய சூடான காற்று, நிலப் பகுதிமீது வீசும்பொழுது, நிலத்தின் குளிர்ந்த காற்றுப்பட்டு விரைவாகக் குளிர்ச்சியடைந்து மூடுபனியாகும். வெயில் ஏற ஏற மூடுபனி மறைந்துவிடும். காற்று அதிகம் வீசும் பகுதிகளில் மூடுபனி மிகுதியாக உண்டாவதில்லை. மூட நம்பிக்கைகள் சில 13 Th