பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மூளை பகுதியேயாகும். பெருமூளையின் உச்சியில் ஓர் ஆழ்ந்த பிளவு உள்ளது. இது மூனையை வலப் பாதியாகவும் இடப் பாதியாகவும் பிரிக்கிறது. இது தவிர, பெருமூளையின் மேற்பரப்பில் பல மடிப்புகள் உள்ளன. மனிதனின் அறிவுத் திறனுக்கு இம் மடிப்பு களே காரணம். விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுக்கு இவ்வளவு அதிகமான மடிப்புகள் இல்லை. மடிப்புகளின் காரணமாகப் பெருமுளை பல பிரிவுகளாகப் (Lobes) பிரிக்கப்பட்டுள் ளது. ஒவ்வொரு பிரிவும் நம் உடலின் ஒவ்வோர் உறுப்பை இயக்குகிறது. உடலின் வலப் பக்க உறுப்புகளைப் பெரு மூளையின் இடப் பாதியும், இடப் பக்க உறுப்புகளை வலப் பாதியும் கட்டுப்படுத்து கின்றன. பெருமூளையின் வெளிப்புறப் பகுதிக்குப் புறணி (cortex) என்று பெயர். புறணி சாம் பல் நிறமானது. சாம்பல் நிற உயிரணுக் கள் நிறைந்திருப்பதே இதற்குக் காரணம். ஒவ்வோர் அணுவிலும் பல நரம்பு இழை கள் உள்ளன. மூளைக்குச் செய்திகளைத் தெரிவிப்பதும் மூளையிலிருந்து உறுப்பு சுளுக்கு உத்தரவுகளைக் கொண்டு செல்வதும் இந்த இழைகளே. சிறு மூளை: பெருமூளைக்குப் பின்புறம் அதனடியில் உள்ளது சிறுமூளை. நமது உடலிலுள்ள தசைகளையெல்லாம் ஒழுங்காக இயங்கச் செய்வது சிறுமுளையே யாகும். முகுளம்: மூளையையும் முதுகெலும் பினுள் உள்ள நரம்புத் தொகுதியான தண்டுவடத்தையும் இணைப்பது முகுணம். இது இதயம், நுரையீரல்கள், இரைப்பை, குடல் முதலிய உறுப்புகளின் இயக்கத் தைக் கட்டுப்படுத்துகிறது. முகுளத்தின் தொடர்ச்சியாக அமைந் திருப்பது தண்டுவடம் (Spinal cord). இதன் வழியாகவே மூளைக்குச் செய்திகள் மூளை முகுளம் Cuneor சிறுதுை மெக்சிக்கோ 49 செல்கின்றன. சில சமயங்களில் மூளைக்கு அறிவிக்காமல் தண்டுவடம் தானாகவே தசைகளுக்கு உத்தரவு பிறப்பிப்பதுண்டு. நம்மை ஓர் எறும்பு கடித்தால் சட்டென அந்த இடத்தைத் தேய்க்கிறோம். இது பெருமூளையின் உத்தரவுப்படி நடப்பதல்ல; தண்டுவடமே இவ்வாறு செய்யத் தூண்டு கிறது. இத்தகைய செயலுக்கு அனிச்சைச் செயல் ( Reflex action ) என்று பெயர். கள், சாராயம் முதலிய போதைப் பொருள்களால் மூளை பாதிக்கப்படுகிறது. எனவேதான் அவற்றைக் குடிப்பவர்கள் தம் நினைவை இழந்து தடுமாறுகின்றனர். பார்க்க: நரம்பு மண்டலம். மெக்சிக்கோ : வட அமெரிக்காக் கண்டத்தின் தென்கோடியிலிருக்கும் குடியரசு நாடு மெக்சிக்கோ. இந்நாட்டின் பரப்பு 19,72,547 சதுர கிலோமீட்டர். மக்கள்தொகை 5,08,29,000 (1971). மெக்சிக்கோவிற்கு வடக்கில் அமெரிக் காவும். தெற்கில் குவாட்டெமாலா, பிரிட்டிஷ் ஹாண்டுராஸ் ஆகிய நாடுகளும் உள்ளன. கிழக்கில் மெக்சிக்கோ வளைகுடா வும் மேற்கில் பசிபிக் சமுத்திரமும் உள்ளன. நாட்டின் நடுப் பகுதி உயர்ந்த பீடபூமி. இதன் இருமருங்கிலும் கடலோரத்தில் உயர்ந்த மலைத்தொடர் கள் செல்கின்றன. இதில் பல எரிமலை களும் உள்ளன. கிழக்கிலும் மேற்கிலும் கடற்கரையை அடுத்துக் குறுகிய சமவெளிகள் இருக்கின் றன. நீர்வளம் மிகுதியாக உள்ளதால் இவை செழிப்பாக உள்ளன. இங்கு அடர்ந்த காடுகள் அதிகம். காடுகளில் பயன்மிக்க பலவகை மரங்கள் வளர்கின் றன. பீடபூமிப் பகுதியிலும் போதிய மழை பெய்கிறது. அதனால் இங்கு உழவுத் தொழில் சிறந்து விளங்குகிறது. மக்களில் பெரும்பாலோர் இப் பகுதியில் வாழ்கின்ற னர். சோளம், கோதுமை, பருத்தி, கரும்பு, புகையிலை, காப்பி முதலியன முக்கிய விளைபொருள்கள். இந் நாட்டில் தாதுவளம் மிகுதி. வெள்ளி உற்பத்தியில் இந் நாடு உலகில் முதலிடம் பெறுகிறது. உலகில் ஆண்டு தோறும் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி யில் 60% இந் நாட்டிலிருந்து கிடைக் கிறது. தங்கம், தாமிரம், துத்தநாகம், காரீயம், இரும்பு ஆகிய உலோகங்களும், மாணிக்கம், மரகதம் போன்ற மணி களும் பெட்ரோலிய எண்ணெய், நிலக்கரி ஆகியனவும் கிடைக்கின்றன. சுத்தோ லிக்கக் கிறிஸ்தவம் இந் நாட்டின் முக்கிய சமயம். தலைநகரின் பெயரும் மெக் சிக்கோ.