பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 அ.ஐ.நா LOAD (லெக்கரி 8கேள்ளி மெக்சிக்கோ

பசிபிக் மெக்சிக்கோ கோதுரை சமுத்திரம் காப்பி இ பெட்ரோலியல் சோளம் கரும்பு மெக்சிக்கோ மெக்சிக்கோ வாேருடன் மெல்லுடலிகள் மத்திய அமெரிக்கா இந் நாட்டில் மாயர்கள், ஆஸ்ட்டெக் கியர் போன்ற சிறந்த நாகரிகம் பெற்ற மக்கள் 600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்தனர். பொன், வெள்ளி அணிகலன் செய்தல், மட்பாண்ட வேலை, கட்டடக் கலை முதலியவற்றில் அவர்கள் சிறந்து விளங்கினர். 16ஆம் நூற்றாண் டின் தொடக்கத்தில் அவர்களை ஸ்பானியர் கள் வென்று தங்களுடைய ஆட்சியை நிறுவினர். ஸ்பானியர் ஆட்சி 300 ஆண்டு கள் நீடித்தது. ஸ்பானியர்கள் பெருமள வில் குடியேறினர். அவர்கள் உள்நாட்டு மக்களுடன் கலந்தனர். இன்று வாழ் வோருள் பெரும்பாலோர் கலப்பினத் தவராவர்.1822-ல் ஸ்பெயினுடனிருந்த உறவை மெக்சிக்கோ துண்டித்துக் கொண்டு சுதந்தர நாடாகியது. பார்க்க : ஆஸ்ட்டெக் நாகரிகம்; மாயா நாகரிகம். மெல்லுடலிகள் (Mollusca) : நத்தை, மட்டி, ஆளி, முத்துச் சிப்பி. முத்துச் சிப்பி, கணவாய் (த.க.) முதலிய உயிரினங்களின் உடல் மிகவும் மென்மையாக இருக்கும். இவற்றை மெல்லுடலிகள் என்பர். இவற் றுக்கு உடலில் முதுகெலும்பு கிடையாது. எனினும் பெரும்பாலானவற்றுக்குக் கடின மான ஓடுகள் உண்டு. இவை கூடுகளாகப் பயன்படுகின்றன. கடற்கரைகளில் காணப் படும் அழகான கிளிஞ்சில்களும், சிப்பி களும், சோழிகளும் சோழிகளும் மெல்லுடலிகளின் கூடுகளேயாகும். இத்தொகுதியைச் சேர்ந்த உயிரினங் களின் உடல், உருவிலும் அளவிலும் வெவ்வேறாக உள்ளன. எனினும் இவை எல்லாவற்றுக்கும் பொதுவான சில அமைப்புகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் கெட்டியான தசையாலான தட்டை யான உறுப்பு ஒன்று உண்டு. இவ்வுறுப்பு இவ்வுயிர்கள் இடம்பெயர்ந்து செல்வதற் குக் கால்போல் உதவுகிறது. ஒவ்வொன்றி லும் போர்வை (Mantle) எனப்படும் மடிப்பு உள்ளது. பெரும்பாலான மெல் அடலிகளில் இந்தப் போர்வையிலிருந்து ஒருவகைச் சுண்ணாம்புப் பொருள் சுரந்து கூடு உண்டாகும். சிலவற்றில் இக்கூடு ஒரே துண்டு அல்லது ஓடு உள்ளதாக இருக் கும். சிலவற்றில் இரண்டு துண்டுகள் அல்லது ஓடுகள் உள்ளதாக இருக்கும். இந்தக் கூடு இவ்வுயிரினங்களின் இதயம், வயிறு முதலிய உறுப்புகளை மூடிப் பாது காக்கிறது. பெரும்பாலான மெல்லுடலி களுக்குத் தனியாகத் தலை கிடையாது. ஆனால் உடலில் தலைப்பகுதி உண்டு. மெல்லுடலிகளில் சுமார் 45,000 இனங்கள் உள்ளன. இவற்றைக் காலின் அமைப்பைக் கொண்டு ஐந்து வகுப்பு களாகப் பகுத்துள்ளனர். நத்தை, சங்கு போன் ன்றவற்றுக்குக் கால்கள் வயிற்றில் அமைந்திருக்கும். இவை 'வயிற்றுக்காலி சுள்' (Gastropods) எனப்படும். இவற்றின் கால்கள் தட்டையாக இருக்கும். இக் கால்களின் உதவியால் இவை ஊர்ந்து செல்லும். இவற்றின் கூடு ஒரே ஓட்டினால் ஆனது. ஊர்ந்துசெல்லும் பொழுது இந்தக் கூட்டைத் தம் முதுகில் சுமந்துசெல்லும். புல்லட்டையும் வயிற்றுக் காலியே. ஆனால் இதற்குக் கூடு கிடையாது. முத்துச் சிப்பிகள், ஆளிகள், மட்டிகள் முதலியவற்றின் கால்கள் கோடரி வடிவில் இருக்கும். எனவே இவை 'கோடரிக் காலி கஸ்" ( Pelecypods ) எனப்படும். இவை தம் கால்களால் ஊர்ந்து செல்வதில்லை. மணல் அல்லது சேற்றில் வளை செய்வதற்கு இக் கால்கள் பயன்படுகின்றன. இவை அனைத்துக்குமே கூடு உண்டு. இக் கூடு இரண்டு ஓடுகள் உடையது. ஓட்டுக் கணவாய், ஈர்க்குக் கணவாய், பேய்க் கணவாய், கடம்பான் முதலிய கணவாய்கள் 'தலைக் காலிகள்' (Cephalopods) எனப்படும். இவற்றில் காலின் ஒரு பகுதி தலையைச் சூழ்ந்துகொண்டிருக்கும்; மற்றொரு பகுதி கைகளாக நீண்டிருக்கும்; இன்னொரு பகுதி, உடலின் போர்வை யறைக்குள் செல்லும் நீர் வெளியேறு வதற்குப் புனல் போன்று அமைந்திருக் பேய்க்கணவாய்க்குக் கூடு கிடையாது. கடம்பானுக்குக் கூடு. உடலின் உள்ளேயே போர்வைக்குள் மறைந்திருக்கும். நாட்டிலஸ் என்ற உயிரினத்துக்கு மிக அழகான ஓடு உடலுக்கு வெளியே அமைத்திருக்கும். இம்மூன்று வகுப்புகளும் பெரியவை. கும்.