பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மெல்லுடலிகள் யானைத் தந்தக் கிளிஞ்சில் போன்ற சில உயிரினங்கள் அடங்கிய 'படகுக் காலிகள்' (Scapopods), கவசக் கிளிஞ்சில்கள் முதலிய சில உயிரினங்கள் அடங்கிய 'இரட்டை நரம்பிகள்' (Amphineura) ஆகிய இரண் டும் மிகச் சிறிய வகுப்புகள். மெல்லுடலிகளில் பெரும்பாலானவை நீரில் வாழ்கின்றன; சில நன்னீரிலும், பல உப்பு நீரிலும் வாழ்பவை. சிலவகை நத்தைகள் நிலத்திலும் வாழும். நத்தை, கணவாய் போன்ற மெல் லுடலிகளை மக்கள் சிலர் உண்பார்கள். முத்துச் சிப்பியிலிருந்து முத்து கிடைக் 51 கிறது.முத்துச் சிப்பி, கிளிஞ்சில் போன்ற வற்றால் பித்தான்கள் செய்கிறார்கள். கிளிஞ்சில் சுண்ணாம்பு தயாரிக்கப் பயன் படுகிறது. சங்கிலிருந்து மோதிரம், வளையல், பதக்கம், சங்கிலி, ஊசி முதலியன செய்கிறார்கள். சோழி அலங் காரத்திற்குப் பயன்படுகிறது. மட்டி வளர்த்தல், ஆளி வளர்த்தல், முத்துக் குளித்தல், சங்கு எடுத்தல் முதலியன இலாபம் தரும் தொழில்களாக நடை பெறுகின்றன. மெல்லுடலிகளில் முக்கியமானவற்றுக் குத் தனிக் கட்டுரைகள் உள்ளன. மெல்லுடலிகள் நத்தை புல்லட்டை வயிற்றுக் காலிகள் தலைக்காலிகள் கோடரிக் காலிகள் முத்துச் சிப்பி சங்கு ஓட்டுக் கணவாய் பேய்க் கணவாய் OOOOOO முத்தும் பிப்பியின் கால் ஊன்று இழைகள், செவுள், ஓடுகளை ஒன்றாகக் கட்டும் தசை, இதயம், வயிறு, வாய், உதட்டு மடிப்பு ஆகியவை மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளன. மட்டி படகுக் காலிகள் யானைத் தந்தக் கிளிஞ்சில்கள் இரட்டை நரம்பிகள் 00 கைட்டான் என்னும் கவசக் கிளிஞ்சில் (மேல்புறமும் அடிப்புறமும் காட்டப் பட்டுள்ளன)