பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

52 பலவகை மெழுகுவத்திகள் மெழுகுவத்தி - மேகங்கள் மெழுகுவத்தி: கிறிஸ்தவக் கோயில் களில் பெரிய மெழுகுவத்தி விளக்குகளைப் பார்க்கலாம். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் மற்ற விழாக் காலங்களிலும் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளையும் மெழுகுவத்தி விளக்குகளால் அலங்கரிப் பார்கள். பிறந்த நாள் விழாக்களின்போது சிலர் தங்கள் வயதைக் குறிக்கும் எண்ணிக்கையுடைய மெழுகுவத்திகளைக் ' கேக்'கில் வைத்து ஏற்றி, பிறந்த நாள் பாட்டுப் பாடி அவற்றை ஒரே முயற்சியில் அணைத்துக் கொண்டாடுவதைப் பார்த் திருக்கலாம். இவை தவிர, பண்டைக் காலம் முதல் ஒளிதரும் விளக்காக மக்கள் மெழுகுவத்தியைப் பயன்படுத்தி வந்திருக் கிறார்கள். முதன்முதலில் ஆடு, மாடு, முதலியவற் றின் கொழுப்பிலிருந்து மெழுகுவத்தி செய்துவந்தனர். தேன்மெழுகு (Bees wax), பாரபின், திமிங்கிலத்தின் கொழுப் பிலிருந்து கிடைக்கும் எண்ணெய் இவற்றை மெழுகுவத்தி செய்ய அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கினர். மெழுகுவத்தியில் திரியொன்று சற்று நீண்டு வெளியே தெரியுமல்லவா? மெல் விய பருத்தி நூல்களைத் திரித்து ஒன்றாகச் சேர்த்தும் சணலிலிருந்தும் ஒருவகை நாணல் தட்டையிலிருந்தும் திரியைச் செய் வார்கள். பிறகு திரியை உருகிய மெழுகில் தோய்த்து ஆறவைப்பார்கள். திரியைச் சுற்றிலும் மெழுகு படியும். தொடர்ந்து இதைப் பல முறை செய்து தேவையான பருமனுக்கு மெழுகுவத்தியைத் தயாரித் தார்கள். நாளடைவில் மெழுகுவத்தி செய்ய அச்சு (Mould) பயன்பட்டது. அச்சின் நடுவில் திரியை வைத்து உருகிய மெழுகை அதில் ஊற்றுவார்கள். இது கெட்டியான தும் மெழுகுவத்தி உருவாகும். இன்று அச்சு முறையில் மெழுகுவத்திகளைப் பல நிறங்களிலும் பல அழகிய வடிவங்களிலும் செய்து விற்கிருர்கள். மேகங்கள்: கடல், ஏரி முதலியவற் றில் உள்ள நீர், சூரிய வெப்பத்தால் ஆவி யாகிறது. இந்த தீராவிதான் வானத்தில் மேகமாக மாறித் தோன்றுகிறது. குளிர்ந்த காற்று வீசும்போது நீராவி குளிர்ந்து மிகச் சிறிய நீர்த்துகள்களாக மாறும்; இவையே திரண்டு மேகங்களா கின்றன. அடுப்பிலுள்ள பாத்திரத்தில் நீர் கொதிக்கும்போது நீராவி வருவதைப் பார்த்திருப்பீர்கள். அதன்மீது சற்று உயரத்தில் ஒரு கண்ணாடியைப் பிடித்தால் தீராவி நீர்த்துளிகனாக மாறிச் சிறு நிவலை களாகப் படியும். இதிலிருந்து, தீராவி குளிர்ந்து நீர்த் துளியாக மாறுவதற்கு ஏதேனும் ஒரு பொருள் இடையிலே வேண் டும் என்று அறிகிறோம். அப்படியானால் மேகம் உண்டாக வானத்தில் என்ன பொருள் இருக்கிறது? வானத்தில் தூசித் துகள்கள் அங்குமிங்கும் மிதந்துகொண் டிருக்கின்றன. இந்தத் தூசித் துகள்களைச் சுற்றிலும் நீர்த்துளிகள் படிந்து மேகங்கள் உருவாகின்றன. மேகங்கள் மேலும் குளிர்ச்சியடைந்தால் மழை (த.க.) பெய் கிறது- வானத்திலே குளிர்ந்த காற்றும், ஈரப் பதமுள்ள வெப்பக் காற்றும் ஒன்று சேரும் போதும் மேகங்கள் உருவாகும். கோடை காலத்தில் தரைமீதுள்ள நீராவியைத் தாங்கிய காற்று வெப்பமடைவதால் அது மேல்நோக்கிச் செல்லும். அங்கு குளிர்ச்சி யடைந்ததும் மேகங்கள் தோன்றும். மலைப் பகுதியில் மேகங்கள் அதிகமாக இருப் பதைப் பார்த்திருப்பீர்கள். மலை உயர் மாக இருப்பதால் அதற்கு அருகில் செல் லும் நீராவி கலந்த காற்று மேலே உயர்ந்து எழும், அப்பொழுது அந்தக் காற்று குளிர்ச்சியடைந்து மேகங்களாக மாறும். அதனால்தான் மலைகளில் மேகங் களை அதிகமாகக் காண்கிறோம். பாலை வனத்தில் பெரும்பாலும் மேகமே இருக்