பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மேகங்கள் - மேகாலயா காது. அங்கு காற்றில் ஈரப்பதமே இராது. அதனால் அக்காற்று வெப்பமடையும்போது மேலே சென்றாலும் மேகம் உருவாவதில்லை. நாம் வானத்திலே பலவகையான மேகங்களைக் பார்க்கிறோம். சில சமயங் களில் அவை வெண்மையாக அங்கங்கே திட்டுத்திட்டாக இருக்கும். மலைபோல வும், கோபுரம் போலவும், மற்றும் பல உருவங்களிலும் மேகங்கள் காணப்படும். இவ்வாறு தோன்றும் மேகங்களை விஞ் ஞானிகள் பத்து வகைகளாகப் பிரித் துள்ளனர். மேகங்களை ஆராய்வதன்மூலம் வானிலையை முன்கூட்டியே ஒருவாறு தெரிந்து எச்சரிக்கை செய்யமுடிகிறது. வாயுமண்டல அழுத்தம், காற்று, கால நிலை மாறுபாடு முதலியன மேகத்தின் தோற்றத்துடன் நெருங்கிய தொடர் புடையன. விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக இன்று செயற்கை மழை (த.க.) உண்டாக்க முயன்று ஓரளவு வெற்றி பெற்றுள்ளனர். விமானங்களில் மேகத் திற்கு மேலே பறந்துசென்று பனிக்கட்டித் துகள்களைத் தூவி மழை பெய்யச் செய் கிறார்கள். ஆனால் மழை பெய்வதற்குப் பக்குவமான நிலையில் மேகங்கள் இருக்க வேண்டும். மேகங்களே இல்லாத வானத் திலிருந்து மழையை வரவழைக்க முடியாது. பார்க்க : மழை. 53 மேகாலயா: இந்தியாவின் மாநிலங் களுள் ஒன்று மேகாலயா. நாட்டின் வட கிழக்குப் பகுதியில் இது அமைந்துள்ளது. தெற்கில் வங்காள தேசமும் மற்ற மூன்று பக்கங்களில் ஆசாம் மாநிலமும் இதன் எல்லைகளாக உள்ளன. இம் மாநிலத்தின் பரப்பு 22,480 சதுர கிலோமீட்டர். மக்கள்தொகை 9,83,340 (1971). ஆசாம் மாநிலத்துடன் இணைந்த பகுதி யாக இம் மாநிலம் முன்பு இருந்தது. ஆனால் இப் பகுதியில் வாழும் மக்களின் விருப்பத்திற்கிணங்க 1970 செப்டெம்பர் 2ஆம் நாள் மேகாலயா மாநிலம் அமைக் கப்பட்டது. இம் மாநிலம் ஆசாம் மாநிலத் இற்கு உள்ளடங்கியதாக இருப்பினும் இதற்கெனத் தனியான சட்டசபை, அமைச்சரவை, அரசாங்கத் தலைமை அலுவலகம் முதலியன உள்ளன. ஆளுநரும் (கவர்னர்) உயர் நீதிமன்ற நீதிபதிகளும் இருமாநிலங்களுக்கும் பொது வாக உள்ளனர். தலைநகர் ஷில்லாங். இம் மாநிலம் மலைப்பாங்கானது. மலை களில் அடர்ந்த காடுகள் உள்ளன. மலைச் சரிவுகளில் தேயிலை பயிராகிறது. ரப்பர் மரங்களும் அதிகம். இந்தியாவிலே அதிக மழை பெய்யும் செரபுஞ்சி என்ற இடம் இங்குதான் உள்ளது. மக்களுள் பெரும் பாலோர் மலைவாசிகள். பாய் நெசவும், கூடை முடைதலும் முக்கியக் கைத் தொழில்கள். மேகங்களை விஞ்ஞானிகள் பத்து வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள். அவற்றுள் சில வகைகளை இங்கே காணலாம்.