பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

54 மேற்கிந்தியத் தீவுகள் - மேற்கு வங்காளம் மேற்கிந்தியத் தீவுகள்: வட அமெ மிக்காக் கண்டத்திற்குத் தென்கிழக்கில் கரிபியன் கடலில் உள்ள தீவுகளுக்கு மேற் கிந்தியத் தீவுகள் என்று பெயர். இந்தியா வுக்குப் புதுவழி கண்டுபிடிக்கும் நோக்கத் துடன் ஐரோப்பாவிலிருந்து மேற்கு நோக் கிப் புறப்பட்ட கொலம்பஸ் (த.க.) 1492-ல் இத் தீவுகளில் ஒன்றான சான் சால்வடாரில் இறங்கினர். இந்தியாவையே கண்டுபிடித்துவிட்டதாக அவர் எண்ணி னார். கொலம்பஸ் கண்டுபிடித்தது கீழ்த் திசையிலுள்ள இந்தியா அல்ல என்று தெரிந்ததும் இத் தீவுகளுக்கு மேற்கிந்தியத் தீவுகள் எனப் பெயர் ஏற்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளின் எண்ணிக்கை சுமார் 1,200. இவற்றுள் சுமார் 200 தீவுகளில்தான் மக்கள் வாழ்கின்றனர். மொத்த மக்கள்தொகை சுமார் இரண்டு கோடி. இத் தீவுகளில் கியூபா (த.க.), ஹிஸ்ப்பானியோலா, ஜமேக்கா, போர்ட்ட ரீக்கோ முதலியன பெரிய தீவுகள். பஹாமா தீவுகள், குவாடலூப், மார்ட்டினீக், பார்பேடோஸ், டிரினிடாடு- டொபேகோ ஆகியவை மற்ற முக்கியமான தீவுகள். இத்தீவுகளில் சில மலைப்பாங் கானவை. இவற்றில் பல எரிமலைகளும் உள்ளன. பவளப் பூச்சிகளின் ஓடுகள் ஒன்றுசேர்ந்து உருவான பவளப் பாறை களால் ஆகியவை பஹாமா தீவுகள் ஆகும். இத்தீவுகள் வெப்பமண்டலத்தில் இருப் பதால் இங்கு மழை மிகுதியாகப் பெய் கிறது. கரும்பு பெருமளவில் பயிராகிறது. அதனால் இவற்றுக்குச் 'சர்க்கரைத் தீவுகள்' என்றும் பெயர் உண்டு. புகையிலை, வாழை, கோக்கோ, காப்பி முதலியன மற்ற முக்கியமான வீ&பொருள்கள், மேற்கிந்தியத் தீவுகள் ஜமேக்க 39 பஹாமா தீவுகள் கரும்பு கோக்கோ புகையிலை வாழை பெட்ரோலியம் அலுமினியம் ஹிஸ்ப் பானியோலா 6 காப்பி குவாட்லூர் /போர்ட்ட ரீக்கேர் பார்பேடோஸ்- 0 0 டொபேகோ - டிரினிடாடு ர ச 0+ குடியரசு, ஜமேக்காவில் அலுமினியத் தாதுவான பாக்சைட்டும் டிரினிடாடில் பெட்ரோலிய எண்ணெயும் கிடைக்கின்றன. கியூபா, டொமினிக்கன் ஹேட்டி. ஜமேக்கா. டிரினிடாடு- டொபேகோ ஆகியவை சுதந்தர நாடுகள் மற்ற தீவுகளில் சில பிரிட்டனுக்கும், சில அமெரிக்காவுக்கும், சில பிரான்ஸுக்கும், வேறு சில நெதர்லாந்துக்கும் சொந்த மானவை. இத்தீவுகளில் வாழும் மக்களுள் பலர் நீக்ரோக்களாவர். இவர்கள், கரும்புத் தோட்டங்களில் வேலைசெய்வதற்காக ஆப் பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைகளின் சந்ததியினராவர். இந்தியர் கள், ஐரோப்பியர் ஆகியோர் இங்கு வாழும் மற்ற இனத்தவர்கள். ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் முதலிய மொழிகள் இங்கு பேசப்படுகின்றன. மேற்கு வங்காளம் : இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்று மேற்கு வங்காளம். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இம் மாநிலத்தின் பரப்பு 87,850 சதுர கிலோமீட்டர். மக்கள்தொகை 4,44,40,000 (1971). கேரளத்திற்கு அடுத்து இதுவே மக்கள் நெருக்கம் மிகுந்த மாநிலமாகும். இம் மாநிலத்தின் முக்கிய மொழி வங்காளி. 1947-ல் இந்தியா சுதந்தரம் அடைந்த போது வங்காளமும் இரண்டாகப் பிரிக் கப்பட்டது. மேற்குப் பகுதி மேற்கு வங் காளம் என்ற பெயருடன் இந்தியாவின் ஒரு மாநிலமாகியது. முஸ்லிம்கள் பெரும் பான்மையோராக இருந்த கிழக்குப் பகுதி பாக்கிஸ்தானுடன் இணைந்தது. 1971-ல் அது வங்காள தேசம் (த.க.) என்ற சுதந் தர நாடாகியது. வடக்கில் ஆசாம் மாநிலம், பூட்டான், சிக்கிம், நேப்பாளம் ஆகிய நாடுகளும், மேற்கில் பீகார். ஒரிஸ்ஸா மாநிலங்களும், கிழக்கில் வங்காள தேசமும், தெற்கில் வங்காள விரிகுடாவும் மேற்கு வங்காளத்தின் எல்லைகளாக உள்ளன. வண்டல்மண் கங்கையாறு இங்குப் பல கிளையாறு களாகப் பிரிந்து கடலில் கலக்கிறது. இந்த ஆறுகள் கொண்டுவரும் படிந்து இம் மாநிலம் மிகச் செழிப்பாக உள்ளது. நெல், சணல், கரும்பு ஆகியவை பெருமளவில் பயிராகின்றன. மாநிலத் தின் வடக்கே இமயமலைச் சாரலில் சிறந்த ரகத் தேயிலை பயிராகிறது. இம் மாநிலத் தில் பல நிலக்கரிச் சுரங்கங்களும் உள்ளன. இந்தியாவில் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்துள்ள மாநிலங்களுள் இதுவும் ஒன்று. சணல் தொழிற்சாலைகளும் பருத்தி