பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மை மைக்கலாஞ்சிலோ நெசவாலைகளும் பல உள்ளன. கார், சைக் கிள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் கண்ணாடி, காகித ஆலைகளும் உள்ளன. இந்தியாவிலுள்ள பெரிய இரும்பு - எஃகுத் தொழிற்சாலைகளுள் ஒன்று துர்க்காப்பூரில் உள்ளது. பர்ன்பூர் என்னுமிடத்தில் மற்றோர் எஃகு ஆலை இருக்கிறது. மிஹிஜம் என்னுமிடத்தில் சித்தரஞ்சன் ரெயில் எஞ்சின் தொழிற்சாலை (த.க.) உள்ளது. இம் மாநிலத்தில் பல்கலைக்கழகங்கள் பல உள்ளன. சாந்திநிகேதனம் என்னுமிடத் இல் கவியரசர் ரவீந்திரநாத டாகுர் தொடங்கிய விசுவபாரதி பல்கலைக்கழகம் உள்ளது. இது இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுள் ஒன்று. மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கல்கத்தா (த.க.). உலகிலுள்ள மிகப் பெரிய நகரங்களுள் இதுவும் ஒன்று. டார் ஜீலிங் (த.க.) இம் மாநிலத்திலுள்ள அழகிய மலைவாசத்தலம். இம் மாநிலத் தின் கோடைகாலத் தலைநகர் இதுவே யாகும். இங்கிருந்து இமயமலையின் அழகிய பனிச் சிகரங்களைக் காணலாம். மை: எழுதுவதற்கும், அச்சிடுவதற் கும் மை பயன்படுகிறது. சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியரும் சீனரும் மையைக் கண்டுபிடித்தனர் என்பர். கிட்டத்தட்ட அதே காலத்தில் பப்பைரஸ் (Papyrus) என்னும் கோரையிலிருந்து ஒருவகைக் காகிதத்தையும் செய்யத் தொடங்கினர். அக் காலத்தில் எழுதப் பட்ட சில காகிதங்களையும் பொருட்காட்சி சாலைகளில் இன்றும் காணலாம். விளக்குக் கரி அல்லது சாதாரணக் கரியுடன் பசை யைச் சேர்த்து அக் காலத்தில் மை தயாரித்து எழுதினர். ரோமானியர் கடலில் வாழும் சிப்பி இனத்தைச் சேர்ந்த ஒருவகை உயிரினத்திலிருந்தும் தயாரித்தனர். மை இன்று எழுதவும், அச்சிடவும் தனித் தனி வகை மை உண்டு. கடுக்காயைப் பொடித்துக் கொதிநீரில் சேர்த்து வடிகட்டு கிறர்கள். பின்பு இரும்பு சல்பேட் கரைசலையும், சில துளிகள் கார்பாலிக அமிலத்தையும் சேர்த்துக் கறுப்பு மை தயாரிக்கிறார்கள். செய்தித்தாள்களும், மற்ற பத்திரிகைகளும் அச்சிடுவதற்குப் பயன்படும் மை தயாரிக்க விளக்குக் கரியை ஆளிவிதை எண்ணெயுடன் சேர்த்துப் பசைபோலாகும்வரை அரைத் துக் கரைப்பார்கள். அச்சு வேலைகளுக்கான மை பெரும்பாலும் எல்லா நிறங்களிலும் தயாரிக்கப்படுகிறது. நாம் சாதாரண மாகப் பயன்படுத்தும் ஊற்றுப் பேனாக் களுக்கென்று தனிவகை மை உண்டு. 55 ஊற்றுப் போளுவுக்கான மை நீலம், கருநீலம், சிவப்பு, பச்சை, கறுப்பு முதலிய நிறங்களிஸ் தயாரிக்கப்படுகிறது. நிலக்கரித் தாரிலிருந்து கிடைக்கும் அனிலீன் சாயங் களைச் சேர்ப்பதனால் இந் நிறங்களைப் பெற லாம். படி எடுப்பதற்குரிய ம்(Copying ink) தயாரிக்கச் சாதாரண மையுடன் சிறிது சர்க்கரை, பிசின், கிளிசரின் முதலிய பொருள்களைச் சேர்த்துக் காய்ச்சுவர். எழுதினால் கண்ணுக்குத் தெரியாத மை வகைகளும் உண்டு. கோபால்ட் குளோரைடை நீரில் கரைத்து வெண்மை யான காகிதத்தில் எழுதினால், எழுதியது கண்ணுக்குத் தெரியாது. இந்தக் காகிதத் தைப் பின்னர் இலேசாகச் குடேற்றினால் நீல நிறத்தில் எழுத்துகள் கண்ணுக்குத் தெரியும். இதேபோல, எலுமிச்சம் பழச் சாறு, பால் ஆகியவற்றில் தோய்த்து எழுதி, பிறகு சூடேற்றினால் பழுப்பு நிறத் தில் எழுத்துகள் தெரியும். சலவையாளர் துணிகளில் அடையாளம் இடுவதற்கென்று எளிதில் அழியாத மையைப் பயன்படுத்துகிறார்கள். வெள்ளி நைட்ரேட் உப்பை அம்மோனியா கரைச வில் சேர்த்து இந்த மை செய்கிறர்கள். ஒளி அல்லது வெப்பத்தால் இது கறுப்பு நிறமடையும். விளக்குக் கரி, பசை இவற்றைக் கலந்து உலர்த்தி மீண்டும் நீரில் கரைத்து ஒரு வகை மை (Indian ink) செய்கிறார்கள். இது சித்திரங்கள் எழுதவும், பட அச்சு (Block) செய்வதற்கு வேண்டிய உருவங் களை வரையவும் பயன்படுகின்றது. மைக்கலாஞ்சிலோ (Michelangelo, 1475 - 1564) : இத்தாலி நாட்டின் சிறந்த சிற்பி மைக்கலாஞ்சிலோ. இவர் சிறந்த ஓவியராகவும் கட்டடக் கலைஞராகவும் விளங்கினார்.15, 16ஆம் நூற்றாண்டு களில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக் காலத்தில் தோன்றிய கண்ஞர்களுள் இவர் மிகச் சிறந்தவர். இவர் செதுக்கியுள்ள அழகிய சிற்பங்களில் இவருடைய முழு ஆற்றலை யும் காணலாம். மைக்கலாஞ்சிலோ இத்தாலியில் பிளாரன்ஸ் நகருக்கு அருகே ஒரு கிராமத் தில் பிறந்தார். சிறு வயதிலேயே இவர் சுலையில்மிகுந்த விருப்பமுடையவராக இருந் தார். அதனால் இவருடைய தந்தை சிறந்த ஓவியர் ஒருவரிடம் ஓவியக் கலையைக் கற்றுக் கொள்ள இவரை அனுப்பினார். அதன் பின்னர், சிற்பப் பள்ளியொன்றில் இவர் பயின்றர். கலையார்வமுள்ள லொரென் சோ டி மெடிச்சி (Lorenzo de Medici) என்ற பிளாரன்ஸ் அரசரின் ஆதரவையும் இவர் பெற்றார்.