பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 மைக்கலாஞ்சிலோ 1496-ல் மைக்கலாஞ்சிலோ ரோம் நகரத்திற்குச் சென்றார், அங்கு முதன் முதலில் இவர் சிலை உருவாக்கிய இவருடைய திறமையை நன்கு வெளிப் படுத்தியது. இயேசு கிறிஸ்து இறந்ததும் அவருடைய தாய் மரியம்மை தம் மகனை மடியில் வைத்துக் கைகளில் ஏந்திக்கொண் டது போன்றதொரு சிலையை மைக்கலாஞ் சிலோ செய்து முடித்தார். தாயின் வேதனையை நன்கு எடுத்துக்காட்டும் வகையில் மரியம்மையின் முகம் அமைந் திருந்தது. காண்போரின் மனம் உருகும் படி அச் சிலையை அமைத்திருந்தார். இச் சிலையை ரோம் நகரிலுள்ள புனித பீட்டர் மாதாகோயிலிஸ் வைத்து இன்றும் வழிபடுகின்றனர். பின்பு இவர் பினாரன்ஸ் திரும்பினர். அங்கு, கிறிஸ்துவின் பக்தர்களுள் ஒருவ ராகிய தாவீது (David) என்பவரின் உருவச் சிலையை மிகப் பெரிய சலவைக் கல்லில் எல்லாரும் வியந்து பாராட்டும் வகையில் செதுக்கினார். ரோம் நகரில் 'சிஸ்ட்டைன் சேப்பல்' என்னும் மாதா கோயிலில் மைக்கலாஞ்சிலோ வரைந்த ஆதாமின் ஓவியம் மைக்கலாஞ்சிலோ 1505ஆம் ஆண்டில் இரண்டாம். ஜூலியஸ் (Julius II) என்னும் போப், மைக்க வாஞ்சிலோலை' ரோம் நகரத்துக்கு அழைத்து சிஸ்ட்டைன் சேப்பல் (Sistine Chapel) என்னும் மாதா கோயிலில் ஓவியங்களைத் தீட்டுமாறு பணித்தார். மைக்கலாஞ்சிலோ முதலில் மறுத்தபோதி னும் பின்னர் இசைந்தார். 1508ஆம் ஆண்டில் இப் பணியைத் தொடங்கினார். இவர் தனியாகவே வண்ண ஒவியங்களைத் தீட்டத் தொடங்கினார். இம் மாதா கோயி லின் கூரையில் பைபிள் கதைகளைச் சித்திரிக்கும் 343 உருவங்களைக் கண்கவரும் வண்ணங்களில் எழுதினார். சாரம் அமைத்து அதன்மீது மைக்கலாஞ்சிலோ மல்லாந்து படுத்துக்கொண்டே மணிக் கணக்காக ஓவியங்களை வரைவார். ஓவியங் களைத் தீட்டி முடிக்க நாலரை ஆண்டுகள் ஆயின. இந்த ஓளியங்கள் இவருக்குப் பெரும்புகழைத் தேடித் தந்தன. இருபத்தோராண்டுகள் சென்றபின் அதே மாதா கோயிலில் பலிபீடத்தின் பின்புறத்தில் இறுதித் தீர்ப்பு" (Last Judgememt) என்னும் ஓவியத்தை மைக்க லாஞ்சிலோ வரைந்தார். இதுவே இவருடைய ஓவியங்களில் மிகச் சிறந்தது என்று பாராட்டப்படுகிறது. அவ்வப் போது இவர் கவிதைகளும் இயற்றி வந்தார். மைக்காலாஞ்சிலோ 1564-ல் தம் 89ஆம் வயதில் காலமானார்.