பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மைக்ராஸ்கோப் மைக்ராஸ்கோப் (Microscope) : கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய பொருள்களை மிகப் பெரிதாகக் காட்டும் ஒரு கருவி மைக்ராஸ்கோப். நமக்குச் சில நோய்கள் உண்டாவதற்குக் கிருமிகளே காரணம். இவை இருப்பது நம் கண்ணுக் குத் தெரிவதேயில்லை. ஆனால் மைக்ராஸ் கோப்பில் வைத்துப் பார்த்தால் அக் கிருமி கள் நெளிவதைத் தெளிவாகக் காணலாம். இரத்தப் பரிசோதனைக்கும் மைக்ராஸ் கோப் தேவைப்படுகிறது. தாவரங்களின் இலை, வேர் முதலியவற்றின் உள்ளமைப்பை நன்றாகத் தெரிந்துகொள்வதற்கும் மைக் ராஸ்கோப் பெரிதும் பயன்படுகிறது. மருத்துவம், தாவரவியல் மட்டுமின்றிப் பெரும்பாலும் மற்ற எல்லா அறிவியல் துறைகளிலும் இக் கருவி பயன்படுகிறது. நோய்க் கிருமிகளில் ஒருவகையான பாக்ட் டீரியங்களைப் பற்றி ஆராய்வது பாக்ட் டீரியவியல் என்னும் தனித் துறையாகும். இத்துறை வளர்ச்சியடைவதற்கு மைக் ராஸ்கோப் பெரிதும் உதவியிருக்கிறது. சாதாரண மைக்ராஸ்கோப் ஒரே ஒரு குவிலென்ஸ் உடையது 57 கண்ணருகு லென்ஸ் பொருளருகு லென்ஸ் கூட்டு மைக்ராஸ்கோப் மைக்ராஸ்கோப்புகளில் இரண்டு வகை கள் உண்டு. ஒன்று சாதாரண (Simple) மைக்ராஸ்கோப். மற்றொன்று கூட்டு (Compound ) மைக்ராஸ்கோப். சாதாரண மைக்ராஸ்கோப் ஓர் உருப்பெருக்கிக் கண்ணாடியாகும் (Magnifying glass). இது ஒரே ஒரு குவி லென்ஸ்தான் (Convex lens) . சிறிய அச்சு எழுத்துகளைப் படிப்பவர் களும், கைரேகை பார்ப்பவர்களும் இதைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்க லாம். கடிகாரம் பழுது பார்ப்பவர் கண்ணில் பொருத்திவைத்துக்கொள்வதும் சாதாரண மைக்ராஸ்கோப்பே. சாதாரண மைக்ராஸ்கோப் ஓர் உருவத்தை ஓரளவே பெரிதாக்கிக் காட்டக்கூடியது. கூட்டு மைக்ராஸ்கோப்பில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட லென்ஸ்களின் அமைப்பு இருக்கும். இவை ஒரு குழாயின் இரு முனைகளில் பொருத்தப்பட்டிருக்கும். கண்ணுக்கு அருகில் இருப்பது கண்ணருகு லென்ஸ் (Eye-piece) எனப்படும். பொருளுக்கு அருகில் இருப்பது பொருளருகு ஸென்ஸ் (Objective). பொருளைத் தெளிவாகக்