பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 காண்பதற்கு ஏற்றவாறு குழாயை மேலே ஏற்றலாம்; அல்லது கீழே இறக்கலாம். இரண்டு லென்ஸ்களின் அமைப்பு, பார்க்க வேண்டிய பொருளை மிகமிகப் பெரிதாக் கிக் காட்டும். பொருளின்மீது ஒளியைப் பிரதிபலிப்பதற்காகக் கீழே ஒரு சிறிய ஆடி இருக்கும். கூட்டு மைக்ராஸ்கோப் ஒரு பொருளை சுமார் 2,500 மடங்கு பெரிதாக்கிக் காட் டும். முதன்முதலாகக் கூட்டு மைக்ராஸ் கோப் நெதர்லாந்தில் 1590-ல் செய்யப் பட்டது. அதன் பின்னர் பலமுறை திருத்தியமைக்கப்பட்டது. எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப்: கூட்டு மைக்ராஸ்கோப்பினால் பார்க்க இயலாத மிகமிக நுண்ணிய பொருள்களையும் தெளி வாகப் பார்ப்பதற்கு இன்று எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப் உள்ளது. இதில் லென்ஸ் கிடையாது. இதில் உண்டாக்கப்படும் மின்சார, காந்த மண்டலங்கள் லென்ஸ் களாகப் பயன்படுகின்றன. எலெக்ட்ரான் கற்றைகள் (Electron beams), ஒளிரும் திரையொன்றில் நாம் பார்க்கவேண்டிய பொருளின் வடிவத்தை அமைக்கின்றன. இதைப் போட்டோ படமும் எடுக்கலாம். எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப் பொருளை இரண்டு லட்சம் மடங்கு பெரி தாக்கிக் காட்டும்! ஒரு 1973-ல் மைஞர் (கருநாடகம்): இந்தியாவி லுள்ள மாநிலங்களுள் ஒன்று மைசூர். இதற்குக் சுருதாம் என்று பெயர் மாற்றப்பட்டது. இது நாட்டின் தென்பகுதியில் மேற்குக் கரையோரமாக அமைந்துள்ளது. இம் மாநிலத்தின் பரப்பு 1,91,770 சதுர கிலோமீட்டர். மக்கள் பிருந்தாவனம் பூங்கா மைசூர் நகரின் அருகில் உள்ளது மைசூர் பெங்களூர் நகரிலுள்ள 'விதான சௌதா' கட்டடம். இது கருநாடக மாநில அரசின் தலைமைச் செயலகமாகும். தொகை 2,92,63,300 (1971). இம் மாநிலத்தின் முக்கிய மொழி கன்னடம். இம் மாநிலத்திற்கு வடக்கில் மகாராஷ் டிரமும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசமும், தெற்கில் தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களும், மேற்கில் அரபிக் கடலும் எல்லைகளாக உள்ளன. இம் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை செல்கிறது. இம் மலைத்தொடரி லிருந்து துங்கபத்திரை, காவிரி ஆகிய ஆறுகள் தோன்றுகின்றன. புகழ்பெற்ற ஜோக் அருவி அருவி (ஜெர்சாப்பா அருவி), சிவசமுத்திரம் அருவி ஆகியவை இங்கு உள்ளன. மலைச் சரிவுகளில் அடர்ந்த காடுகள் உள்ளன. இங்கு சந்தன மரங்கள் அதிகம். காடுகளில் புலி, சிறுத்தை, காட்டு எருமை, கரடி, யானை முதலிய விலங்குகள் வாழ்கின்றன. இம் மாநிலத்தின் முக்கியத் தொழில் வேளாண்மை. பழத் தோட்டங்களும், காய்கறித் தோட்டங்களும் மிகுதி. மலைச் சறிவுகளில் காப்பி பயிராகிறது. இம் மாநிலத்தில் தொழில்வளமும் சிறந்து வினங்குகிறது. பட்டு நெசவு இங்கு நீண்டகாலமாக நடைபெற்று வரும் ஒரு தொழிலாகும். மைசூர்ப் பட்டுப் புடவை கள் உலகப் புகழ்பெற்றவை. சந்தன மரங் களிலிருந்து சந்தன எண்ணெய் கிடைக் கிறது. அதைக் கொண்டு வாசனைப் பொருள்கள், சோப்பு முதலியன தயாரிக் கின்றனர். சந்தன மரத்திலும் தந்தத் திலும் அழகிய சிற்பவேலைப்பாடுகள் செய் வதில் மைசூர் புகழ்பெற்றது. கோலார் என்னுமிடத்தில் தங்கச் சுரங் கம் உள்ளது. இது இந்தியாவிலுள்ள ஒரே