பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மையம்விட்டோடும் விசை தங்கச் சுரங்கமாகும். பத்ராவதியில் இரும்பு எஃகு ஆலை உள்ளது. மென்டு, சரிக்கரை, காகித ஆலைகளும் இம் மாநிலத் தில் பல உள்ளன. மாநிலத்தின் தலைநகரம் பெங்களூர். இது மிகவும் அழகிய நகரம், உயரமான இடத்தில்* அமைத்திருப்பதால் இங்கு இதமான தட்பவெப்பம் நிலவுகிறது. அழகிய கட்டடங்களும் பூங்காக்களும் இங்கு உள்ளன. தொேைபசிக் கருவி (டெலிபோன்). கடிகாரம், மின்சார விளக்கு, மருந்துகள், சிகரெட், சோப்பு முதலியன தயாரிக்கும் தொழிற்சாலைகளும் பருத்தி,பட்டு, கம்பள நெசவாலைகளும், இந்நகரில் உள்ளன. விமானம் கட்டும் தொழிற்சாலையும் இங்கு உள்ளது. மைசூர் நகரில் மன்னரின் அழகிய அரண்மனை உள்ளது. ஆண்டுதோறும் தவராத்திரியின்போது இங்கு நடைபெறும் தசரா விழா புகழ்பெற்றது. மைசூருக்கு அருகிலுள்ள பிருந்தாவனம் பூங்கா மிக அழ ழகியதாகும். சோமநாதபுரம், பேலூர், ஹளேபீடு, ஹம்பெ, நந்திதுர்க்கம், சாமுண்டி மலை ஆகிய இடங்களிலுள்ள கோயில்கள் சிற்பக் கலைச் சிறப்புடையவை. சிரவணபெள்ள என்னுமிடத்திலுள்ள கோமட்டேசுவரர் உருவமும் சாமுண்டி மயிைலுள்ள நந்தி உருவமும் புகழ்பெற் றவை. உ மையம்விட்டோடும் விசை Centrifugal force) : வேகமாகச் சுழலும் ஒரு விளிம்பில் தட்டின் ஒரு நாணயத்தை வைத்தால் அது வெளியே தூக்கியெறியப் படுகிறது அல்லவா? அதற்குக் காரணம் ஒரு விசை. அந்த விசைக்கு மையம் விட்டோடும் விசை என்று பெயர். வட்ட மான பாதையில் சென்றுகொண்டிருக்கும் பொருளை, ஒரு அந்த வட்டத்திற்கு வெளிப்புறம் இழுப்பதே மையம்விட் டோடும் விசை. கார் நீரும் சேறும் நிறைந்த சாலையில் வேக மாகச் செல்லும் மோட்டார் கார், பின்புறம் நீரையும் சேற்றையும் வாரியடிப் பது இந்த விசையினால்தான். நிலையாக ஓரிடத்தில் இருந்தால் நீரும் சேறும் சக்கரத்தில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கும். சக்கரம் சுழல்வதால் உண் டாகும் மையம்விட்டோடும் விசையினால் அவை வாரியடிக்கப்படுகின் றன. வேகமாகச் செல்லும் காரிலோ, பஸ் விலோ உட்கார்ந்திருக்கும்போது, ஊர்தி இடதுபுறம் வளைந்து திரும்பினால், நாம் வலதுபுறம் சாய்கிறோம். அதாவது, மையம்விட்டோடும் விசை நம்மை வலது புறம் இழுக்கிறது. 59 ஒரு கயிற்றின் முனையில் கல்லைக்கட்டி, மற்றொரு முனையைக் கையில் பிடித் துக் கொண்டு வேகமாகச் சுழற்றுங்கள். கல் சுற்றிச் சுற்றி வரும். கயிற்றின் ஒரு முனையைத்தான் நீங்கள் பிடித்துக்கொண் டிருக்கிறீர்கள்; மற்றொரு முனையை யாரும் பிடித்து இழுக்கவில்யை எனினும், கயிறு நேராகவும், உறுதியாகவும் இருப்பதெப் படிர் மையம்விட்டோடும் விசையினால் தான். அந்தக்கல்லை வட்டப் பாதையினின் றும் வெளிப்புறம் இழுப்பது மையம்விட் டோடும் விசை. ஆனால் கல் வட்டப் பாதை யிலேயே இருக்கிறது. இதற்குக் காரணம் மையம்விட்டோடும் விசைக்கு நேர் எதிராகச் செயல்படும் மற்றொரு விசை ஆகும். இந்த விசைக்கு மையம்நாடும் விசை ( Centripetal force) என்று பெயர். புளி ஈர்ப்பு ( த.க.) எனப்படும் புவியில் கவர்ச்சி விசையும் மையம் தாடும் விசையேயாகும். நாம் வாழும் பூமி வேகமாகச் சுழன்றுகொண்டிருக்கிற தல்லவா? அப்படியானால் அதன் பரப்பில் உள்ள நாமும். மற்ற பொருள்களும் மையம்விட்டோடும் விசையினால் வெளியில் தூக்கியெறியப்பட வேண்டும்; ஆனால் அப்படி நிகழாதவாறு புவியின் கவர்ச்சி விசை, மையம்விட்டோடும் விசைக்கு எதிராகச் செயல்படுகிறது. பார்க்க: புவி ஈர்ப்பு. விண் மையம்விட்டோடும் விசையை அடிப் படையாக வைத்து இயங்கும் எந்திரங்கள் உள்ளன. ஒரு பாத்திரத்தில் உள்ள வேகமாகச் சுழற்றினால் பல திரவத்தை அதிலுள்ள கனமான பொருள்கள் இலேசான பொருள்களினின்றும் பிரிந்து வெளிப்புறம் ஒதுங்கும்; அல்லது வெளியே சிதறும். பிரிக்க வேண்டிய பொருளுக் கேற்ற வகையில் இந்த எத்திரங்களைப் (Centrifuges) அமைத்திருக் பூமி சுழல்வதால் ஏற்படும் மையம்விட்டோடும் விசைக்கு நேர் எதிராகச் செயல்படுகிறது புவியின் கவர்ச்சி விசை பலவகையாக