பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 மொகஞ்சதாரோ வேகமாகச் சுழலும் தட்டின் விளிம்பில் ஒரு நாணயத்தை வைத்தால் அது வெளியே தூக்கியெறியப்படுகிறது. நீரும் சேறும் நிறைந்த சாலையில் வேகமாகச் செல்லும் மோட்டார்கார், பிள்புறம் கீரையும் சேற்றையும் வாரியடிக்கிறது. இவற்றுக்குக் காரணம் மையம்விட்டோடும் விசை கிறார்கள். பாலிலிருந்து வெண்ணெய் எடுக்கவும், எண்ணெயிலிருந்து தூசு முதலியவற்றைப் பிரிக்கவும் இவை பயன் படுகின்றன. ரசாயன, மருத்துவக் கூடங் அணில் நோய்க் கிருமிகள், சிறுநீர், இரத்தம் முதலியவற்றைப் பரிசோதனை செய்வதற் கும் வெவ்வேறு வகையில் அமைத்த இத்தகைய எந்திரங்கள் பயன்படுகின்றன. மைனா : சாதாரணமாக வீட்டுத் தோட்டங்களில் காணப்படும் மைனா எல்லோருக்கும் தெரிந்த பறவை. காலையி லும் மாலையிலும் இது எழுப்பும் பேரொலி நெடுந்தொலைவு கேட்கும். பொழுது சாய்ந்ததும் மைனாக்கள் ஒன்றுகூடி மரங் களிலும் உயரமான கட்டடங்களின் பொந்துகளிலும் அடையும். மைனா ஓர் அழகான சிறு பறவை. இதன் உடலில் சுறுப்பும், இருண்ட பழுப்பு நிறமும் கலந்திருக்கும். தலை, கழுத்து, மார்பு ஆகியவை கறுப்பாக இருக்கும். இறகும் வாலும் வெள்ளைப் பட்டை தீட்டியதுபோல இருக்கும். கால்கள் மஞ்சள் நிறமானவை. இதன் அலகு தடித் தும், வளைந்தும் மிகவும் குட்டையாகவும் இருக்கும். அலகின் நுனிப் பகுதி மஞ்சள் மைனா வேகமாகச் செல்லும் வண்டியில் உட்கார்த்திருக்கும் ஒருவர், ஹர்தி இடதுபுறம் வளைந்து திரும்பினால் வலதுபுறம் சாய்கிறார். பின்புறம் நிறமுள்ளது. கண்களுக்குப் நீளமாக மஞ்சள் பட்டை காணப்படும். மைனாவை நாகணவாய்ப்புள் என்று இலக்கியங்கள் கூறும். மைனாக்கள் இணை யாகவும், சிறு கூட்டங்களாவும் காணப் படும். இவை புல்தரைக்கு வந்து அங்குள்ள புழு பூச்சிகள், வெட்டுக் கிளி முதலியவற் றைப் பிடித்துத் தின்னும். இவை அத்திப் பழங்களை விரும்பி உண்ணும். மைனாக்கள் அதிகத் துணிவுள்ளவை. தாம் வழக்கமாக இரைதேடும் புல்வெளிக்கு வேறு பறவை வந்தாஸ், இரண்டே மைனக்க அவற்றை விரட்டியடித்துவிடும். இந்தியா முழுவதும் மைஞ காணப்படு கிறது. மற்றும் இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளிலும், தென்மேற்குப் பசிபிக் தீவுகனிலும் இதைக் காணலாம். உயரமான மரம், கட்டடம் முதலிய வற்றின் பொந்தில் மைனா கூடு கட்டு கிறது. இது ஒரு தடவைக்கு மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். செல்லப் பறவையாக மைனாவை வீடு களில் வளர்ப்பதுண்டு. கிளியைப் போலவே மைனாவையும் பேசப் பழக்க லாம். மொகஞ்சதாரோ: சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்தில் சிறந்த மக்கள் இந்தியாவில் வாழ்ந்து வந்தனர். வட இந்தியாவில் சிந்து நதிப் பள்ளத்தாக்கில் சுமார் கி.மு. 3000 முதல் கி.மு. 1500 வரை மிக உயர்ந்த நாகரிகம் ஒன்று ஓங்கி வளர்ந்திருந்தது. இந்த உண்மையை சிந்துவெளிப் பகுதியில் தொல்பொருளியல் (த.க.) அறிஞர்கள் அகழ்ந்தெடுத்த பண்டைய நகரங்களைக்