பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மொகஞ்சதாரோ 61 கொண்டு இன்று நாம் அறிய முடிகிறது. சிந்துவெளியில் அவ்வாறு அகழ்ந்தெடுக்கப் பட்ட நகரங்களில் ஒன்று மொகஞ்ச தாரோ. இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து பிரித்து சென்ற இன்றைய பாக்கிஸ்தான் நாட்டிலுள்ள சிந்து மாநிலத்தில் வார்க் கானா என்ற மாவட்டத்தில் மொகஞ்ச தாரோ இருக்கிறது. சட்லெஜ் ஆற்றின் கரையில் ஹரப்பா (த.க.) என்ற பழைய நகரம் 1922-ல் தோண்டியெடுக்கப் பட்டது. அதேசமயத்தில் மொகஞ்சதாரோ என்ற இடத்தில் ஒரு பழைய பௌத்தத் தூபி கிடைத்தது. இதையும் ஹரப்பாவில் கிடைத்த புதைபொருள்களையும் ஆராய்ந்த தில் அவை வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டவை எனத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்திய, அயல்நாட்டு அறிஞர்கள் சிந்துவெளி நெடுகிலும் பல இடங்களில் அகழ்வு நடத்தினர். மொகஞ்ச தாரோ நகரையும், சானு தாரோ (Chanu Daro) முதலிய நகரங்களையும் அவ்வாறு அகழ்வாராய்ச்சி செய்து கண்டனர். நகரமைப்பு, கட்டடச் சிற்பம் முதலிய பல வகைகளிலும் இந் நகரங்கள் ஒற்றுமை யுடையனவாகக் காணப்பட்டன. எனவே, இவை ஒரு காலத்தில் சிந்துவெளி முழுதும் செழித்தோங்கியிருந்த ஓர் உயர்ந்த நாகரிகத்தின் சின்னங்கள் என்பது தெரிய வந்தது. இந்நாகரிகத்திற்குச் 'சிந்துவெளி நாகரிகம்' (த.க.) எனப் பெயரிட்டனர். உலகிலேயே முதன்முதலில் திட்ட மிட்டு அமைக்கப்பட்ட நகரம் மொகஞ்ச தாரோ ஆகும். இது ஏழுமுறை அழிந்து மீண்டும் அமைக்கப்பட்டதாகத் தோன்று கிறது. இங்குக் கோட்டைப் பகுதி, நகரப் பகுதி என இரு பகுதிகள் உள்ளன. கோட்டைப் பகுதியில் பெரிய குளம். தானியக் களஞ்சியங்கள், புரோகிதர் இருப் பிடங்கள், நகராட்சி மன்றங்கள் காணப் படுகின்றன. இப்பகுதியில் அரசர்கள் வாழ்ந்தனர், நகரப் பகுதியில் பொதுமக்கள் அகழ்ந்தெடுத்த மொகஞ்சதாரோ நகரின் ஒரு பகுதி மொகஞ்சதாரோ அகழ்வில் காணப்படும் ஒரு கிணறு வாழ்ந்தனர். இங்கு இருமருங்கும் வரிசை யாக வீடுகள் உள்ள நீண்ட வீதிகள் உள்ளன; கிணறுகளும் காணப்படுகின் றன. இங்குக் கழிவுநீர் செல்வதற்கு வடிகால்கள் அமைந்திருக்கின்றன. களை மொகஞ்சதாரோவின் புதைபொருள் ஆராய்ந்ததன்மூலம் சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்புகள் தெரியவந்துள் ளன. சுட்ட செங்கற்களாலான வீடுகளி லும் மாடமாளிகைகளிலும் சிந்துவெளி நாகரிக மக்கன் வாழ்ந்தனர். தச்சுவேலை. கொல்வேலை, தந்தவேலை முதலிய பல வகைத் தொழில்களை அவர்கள் அறிந் திருந்தனர். நிலத்தை உழுது நெல், கோதுமை, பருத்தி முதலியன பயிரிடக் சுற்றிருந்தனர். பசு, எருமை, யானை, ஓட்டகம், தாய் முதலிய விலங்குகளைப் பழக்கிப் பயன்படுத்தினர். பலவண்ணப் பாண்டங்கள், விளையாட்டுக் கருவிகள், சங்கு, சிப்பி, மண், விலை உயர்ந்த கற்கள் இவற்றால் அணிகலன்களைச் செய்து அணிந் தனர். தங்கம், வெள்ளி, செம்பு, வெள்ளீயம் முதலிய உலோகங்களைப் பயன்படுத்தினர். எகிப்து, மெசப்பொட்டேமியா, பாபி லோனியா முதலிய நாடுகளுடன் வாணிகம் செய்தனர். சிவலிங்கம், பெண் தெய்வம் முதலியவற்றை வழிபட்டனர். இந்தியாவில் கி.மு. 1500-ம் ஆரியார் கள் வந்து குடியேறினார்கள் என்பர். இந்த ஆரியர்களுக்கு முற்பட்டவர்கள் இந்து வெளி மக்கள். மொகஞ்சதாரோவில் பல் வேறு பட எழுத்துகள் காணப்படுகின்றன. இவை சிந்துவெளி மக்கள் பேசிய மொழி எனக் கருதப்படுகிறது. இந்த எழுத்துக்கனோடு பல தமிழ்ச் சொற்கள் காணப்படுவதால், இம் மொழி தமிழோடு