பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

62 தொடர்புடைய பழந் திராவிட மொழி யாக் இருக்கலாம் என ஹீராஸ் பாதிரியார் என்ற அறிஞர் ஆராய்ச்சி செய்து கூறியுள் ளார். இதனாலும், சிந்துவெளி மக்கள் திராவிடர்களுக்குரிய சிவ வழிபாட்டை உடையவர்களாக இருந்துள்ளமையாலும் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று அவரும் மற்றும் பல இந்திய, அயல் நாட்டு அறிஞர்களும் கருதுகின்றனர். ஆனால், ஒருசிலர் சிந்துவெளி சுமேரிய (Sumerian) இனத்தவர் மக்கள் என்பர். இந்தியாவின் தொன்மைக்கும் சிறப்புக் கும் காரணமான சிந்துவெளி நாகரிகம், பருவக் காற்றுப் போக்கின் மாறுதலினா லும், காடுகள் அழிக்கப்பட்டதாலும், ஆறுகளின் வெள்ளப்பெருக்கினாலும், ஆரியர்களின் படையெடுப்பாலும் அழிந்து போயிற்று. வட மொழி: தமிழ்நாட்டில் பெரும் பாலான மக்கள் பேசும் மொழி தமிழ். கேரள மாநில மக்கள் மலையாள மொழி யைப் பேசுகிறீர்கள். ஆந்திரத்தில் தெலுங்கும், கருநாடகத்தில் (மைசூர்) கன்னடமும் பேசப்படுகின்றன. இந்தியாவில் இந்தி, வங்காளி, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி முதலிய பல்வேறு மொழிகள் வழங்குகின்றன. ஆங்கிலம். பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்யன், சீனம், அரபு முதலியன அயல்நாட்டு மொழிகள். மக்கள் தங்கள் எண்ணத்தையும் கருத்தை யும் பிறருக்குத் தெரிவிக்கவும், ஒருவருக் கொருவர் தொடர்பு கொள்ளவும் உதவும் கருவியாக மொழி பயல்படுகிறது. மொழி ஆதி மனிதன் தன் கருத்தை மற்றொரு வனுக்குத் தெரிவிக்க ஏதோ ஒருவகை ஒலியை எழுப்பினான். நாளடைவில் தான் எழுப்பும் ஒவ்வொரு வகையான ஒலிக்கும் ஒவ்வொரு பொருளை அவன் முடிவு செய்து கொண்டான். இதன் மூலமாகப் பேச்சு மொழி ஏற்பட்டது. எதிரிலுள்ள ஒருவனிடம் தன் கருத்தைத் தெரிவிப்பதற் குப் பேச்சு மொழி பயன்பட்டது. தன் எதிரிலோ, அருகிலோ இல்லாத ஒருவனுக் குத் தன் கருத்தைத் தெரிவிக்க விரும் பினான். அதுபோல், பிற்காலத்தில் வாழப் போகும் மக்களுக்கும் தன் எண்ணத்தைத் தெரிவிக்க முயன்றான். இம் முயற்சியின் பயனாகப் பேச்சில் எழுப்பிய ஒவ்வோர் ஒலிக்கும் ஒவ்வொரு வடிவத்தை அமைத் தான். இவ்வாறு எழுத்து (த.சு.) தோன்றி யது. இவ்வெழுத்துகளைக் கொண்டு தன் கருத்துகளைக் கல்லிலும், களிமண்ணிலும், ஒயிைலும், செப்புத் தகட்டிலும் எழுதி வைத்தான். இப்படி எழுத்து மொழி தோன்றியது. பேச்சுமொழி மறைந்துவிடுகிறது; ஆனால் எழுத்துமொழி நெடுங்காலம் நிலைத்து நிற்கிறது. இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன் வாழ்ந்த மக்கள், அன்று எழுதிவைத்த இலக்கியங்கள் இன்றுவரை அழியாமல் வாழ்கின்றன. பல விடை மொழி எப்பொழுது, எங்கு தோன்றி யது என்பது தெரியவில்லை. உலகில் ஒரு மொழி தோன்றி அங்கிருந்து மற்ற மொழி கள் எல்லாம் தோன்றினவா அல்லது பல இடங்களில் மொழிகள் தம்முள் தொடர்பின்றித் தனித்தனியே தோன்றி, அவற்றிலிருந்து பிற்காலத்தில் மேலும் பல மொழிகள் தோன்றினவா? இவ்வினாக் சுளுக்கு முடிவான இதுவரை கிடைக்கவில்லை. தமிழ், சமஸ்கிருதம் இரண்டுமே முதலில் தோன்றிய மிகப் பழமையான மொழிகள் என்று அறிஞர் கள் கருதுகிறார்கள். உலகில் இன்று சுமார் 1,500 மொழிகள் உள்ளன. மொழி இயலார் இவற்றை மொழிக் குடும்பங் களாகப் பிரித்துள்ளனர். இந்தியாவில் வழங்கும் சமஸ்கிருதமும், அதைச் சார்ந்த வட இந்திய மொழிகளும், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் முதலிய ஐரோப்பிய மொழிகளும், ஆரியம் எனப்படும் இந்தோ-ஐரோப்பிய மொழில் குடும்பத்தைச் சேர்ந்தவை. அரேபியாவிலும், வட ஆப்பிரிக்காவிலும் வழங்கும் பாபிலோனிய மொழி, எபிரேய மொழி, பினிஷிய மொழி, அரபு மொழி முதலியவை செமிட்டிக் (Semitic) மொழிக் குடும்பத்தைச் சாரும். சீனம். தாய் (சீயம்), பர்மியம், திபெத்தியம் முதலிய மொழிகள் சீனே-திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆப்பிரிக்கா வில் வழங்கும் பெரும்பாலான மொழிகள் பான்டூ (Bantu) என்னும் மொழிக் குடும் பத்தைச் சாரும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலியவை திராவிட மொழிக் குடும்பத்தில் அடங்கும். இதுபோல் இன்னும் பல மொழிக் குடும் பங்கள் உள்ளன. இன்று மொழிவாயிலாகவே கருத்து கனைத் தெரிவிக்கிறேம். எனினும் சிஸ சம யங்களில் ஓர் இடத்தையோ பொருளையோ குறிக்கச் சுட்டுவிரலை நீட்டிக் காட்டு கிறோம். பேச வேண்டாம் என்பதற்கு வாயைக் கையால் மூடிக் காட்டுகிறோம். பெருவிரலை நிமிர்த்தி நீட்டி வாயருகே காட்டிக் குடிக்கத் தண்ணீர் வேண்டு மௌத் தெரிவிக்கிறோம். இவ்வாறு எத்தனையோ சைகைகளினால் கருத்துகளைத் தெரிவிப்பதும் ஒரு வகை மொழியே யாகும். ஊமையர்களும் செவிடர்களும் இத்தகைய சைகை மொழியினால் பேசிக்