பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மொழி - மொனாக்கோ கொள்வார்கள். சில குறிப்பிட்ட கருத்து களை உணர்த்தவே இந்தச் சைகைமொழி உதவும். தூரத்திலிருந்தும், ஒனி இல்லாத இரவு நேரத்திலும் சைகைகளைப் பிறர் அறியமுடியாது. எனவே சைகை மொழி யைவிடப் பேச்சு மொழியே சிறந்தது. எனினும், சில வேலைகளுக்கு இன்னும் சைகை மொழியைப் பயன்படுத்தி விருகிறார்கள். ராணுவத்தில் செய்நிப் படையினர் (Signal Corps) பலவகைச் சைகைகளினால் செய்திகளைத் தெரிவிக் கிறார்கள். ஒரு மொழியில் பல்லாயிரக்கணக்கான சொற்கள் இருக்கும். அவை அனைத்தை யும் ஒருவர் அறிந்துகொள்வதென்பது இயலாது. இவ்வாறு நாம் அறியாத சொற் சுளுக்குப் பொருள் தெரிந்துகொள்ள உதவுவது 'அகராதி' என்னும் நூலாகும். இதில் ஒரு மொழியிலுள்ள சொற்கள் யாவும் அந்த மொழியின் அகர வரிசைப் படி தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு சொல் லுக்கும் பொருள் தரப்பட்டிருக்கும். இத்தகைய அகராதிகள் தோன்றுவதற்கு முன்மாதிரியாக இருந்தவை 'நிகண்டுகள்' என்ற நூல்களாகும். இவற்றில் பல பொருள் குறிக்கும் ஒரு சொல், சொல், ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள் முதலியன அகரவரிசையில் தொகுக்கப் பட்டிருந்தன. மேலும் அக் காலத்தில், அச்சுக் கலை தோன்றியிராததால் மனப் பாடம் செய்வதற்கு வசதியாக நிகண்டு கள் யாவும் செய்யுள் வடிவிலேயே அமைத் தன. அகராதி தோன்றிய பிறகுதான், உரைநடையிலேயே சொற்களுக்குப் பொருள் கூறப்பட்டது. அலுமினியம் என்ற சொல்லுக்கு அகராதியைப் பார்த்து ‘அது ஓர் உலோகம்' என அறியலாம். ஆனால், அலுமினியத்தின் தன்மைகள் என்ன? அதன் பயன்கள் யாவை? அதைக் கண்டு பிடித்தவர் யார்? இவற்றை அகராதியைப் பார்த்துத் தெரிந்துகொள்ள இயலாது. அதற்குக் 'கலைக்களஞ்சியம்' (த.க.) என்ற நூலைப் பார்க்கவேண்டும் அதில் நாம் அறிந்துகொள்ள விரும்பும் பொருள்களைப் பற்றி விரிவான கட்டுரை கள் அடங்கியிருக்கும், அகராதிகளும், கலைக்களஞ்சியங்களும் மொழியின் வளர்ச் சிக்கு இன்றியமையாதன. இன்று உலகி லுள்ள எல்லா முக்கிய மொழிகளிலும் இவை உள்ளன. உலகிலுள்ள உயிரினங்களில் மனிதன் மட்டுமே பேசும் திறன் பெற்றவன். மொழியை அரியதொரு கலையாக வளர்த் திருக்கிறான், மொழி மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் மிகச் சிறந்த கருவி; 63 பலர் சேர்ந்து ஒரு சமுதாயமாய், ஓர் இனமாய்ப் பழகி வாழ்வதற்குத் துணை புரிவது. இந்திய மொழிகளில் பெருவாரியாக வழங்கும் 15 மொழிகள் மட்டும் இந்திய அரசியல் அமைப்பில் அங்கீகாரம் பெற் றுள்ளன. இம்மொழிகளையும், 1961ஆம் ஆண்டில் எடுத்த கணக்கின்படி, அவற் றைப் பேசுவோரின் எண்ணிக்கையையும் முதல் தொகுதியிஸ், இந்திய மொழிகள் என்னும் கட்டுரையில் காணலாம். காலப்போக்கில் சமுதாயத்தில் ஏற் படும் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப மொழி யும் மாற்றமும் வளர்ச்சியும் பெற்று வர வேண்டும். இல்லையெனில் அந்த மொழி வழக்கிழந்து போய்விடும். இந்தியாவில் சமஸ்கிருதமும், ஐரோப்பாவில் கிரீக், லத்தீன் மொழிகளும் இவ்வாறு பேச்சு வழக்கிழந்த மொழிகளாகும். இம் மொழி கள் இன்று இலக்கியங்களில் மட்டுமே வாழ்கின்றன. தமிழ்மொழி மிகத் தொன் மையான மொழியாக இருப்பினும், காலப் போக்கில் புதிய அறிவுத்துறைகளைக் கொண்டு வளர்த்தமையால் இன்றும் பேச்சு மொழியாகவும், இலக்கிய மொழியாகவும் வாழ்கிறது. பார்க்க: ஆங்கிலம்: இந்திய மொழிகள்: இலக்கியம்; சமஸ்கிருதம்; தமிழ். மொனாக்கோ: உலகிலேயே மிகச் சிறிய நாடு மொனாக்கோ. இந்நாட்டின் பரப்பு சுமார் ஒன்றரை சதுர கிலோமீட்டர் தான்! பிரான்ஸ் நாட்டின் தென் கடற்கரை யில் இச் சிறுநாடு அமைந்துள்ளது.சுமார் 20,000 மக்களே இந் நாட்டில் உள்ளனர். எனினும் இந் நாட்டிற்கு ஓர் அரசரும் அமைச்சரவையும் நாடாளுமன்றமும் உண்டு; தனிக் கொடி உள்ளது. தனியாக ராணுவமும் போலீஸ் படையும் உள்ளன. நீதிமன்றங்களும் ஒலிபரப்பு நிலையமும் உள்ளன. தனி நாணயங்களையும் அஞ்சல் தலைகளையும் இந் நாடு அச்சிட்டுக்கொள் இறது. மத்தியதரைக் கடெையாட்டியுள்ள இந் நாடு மூன்று சிறு நகரங்களைக் கொண்டது. இந் நகரங்கள் ஆல்ப்ஸ் ஆல்ப்ஸ் மலைச்சரிவில் அழகான சூழ்நிலையில் அமைந்துள்ளன. இங்கு இதமான வெப்பநிலை நிலவுகிறது. நடன அரங்குகள் பல இங்கு உள்ளன. படகுப் போட்டியும் பிற கேளிக்கை விளையாட்டுகளும் இங்கு அடிக்கடி நடை பெறும். உல்லாசமாகப் பொழுதுபோக்கு வதற்கு ஏராளமான மக்கள் இங்கு வருகிறார்கள். இந் நாட்டிற்குள் செல்வ தற்கு எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது. வெளிநாட்டினருக்காகத்