பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

64 மோட்டார் சைக்கிள் தங்கும் விடுதிகள் பல இங்கு உள்ளன. இவற்றின் மூலமும், பொழுதுபோக்கு அரங்குகளின் மூலமும் கிடைக்கும் இலாபத்திலிருந்து அரசாங்கத்திற்கு நிறைய வருமானம் கிடைக்கிறது. அதனால் தம் நாட்டு மக்களுக்கு அரசாங்கம் வரி விதிப்பதில்லை. கடல் பொருள்களைக் கொண்ட காட்சிசாலை ஒன்று இங்கு உள்ளது. இது உலகில் உள்ள சிறந்த காட்சிசாலைகளுள் ஒன்றாகும். மோட்டார் சைக்கிள்: சாலையில் 'படபட'வென்ற ஓசையுடன் மோட்டார் சைக்கிள் வேகமாகச் செல்வதை நாம் பார்க்கிறோம். சைக்கிள் போல இரண்டு சக்கரங்களுடன் இருப்பதாலும் மோட் டார் எஞ்சினால் ஓடுவதாலும் இதற்கு இப் பெயர் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளின் இரண்டு சக் கரங்களுக்கிடையில் எஞ்சின் உள்ளது. இது மோட்டார் காரில் உள்ள எஞ்சினைக் காட்டிலும் சிறியது; எளிய அமைப் புடையது. பெட்ரோலை எரிபொருளாகப் பயன்படுத்தி இந்த எஞ்சின் இயங்குகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலில் சாதாரண மோட்டார் கார் எவ்வளவு தொலைவு செல் லுமோ, அதைப்போல சுமார் மூன்று அல்லது நான்கு மடங்கு தொலைவு செல்லக் கூடியது மோட்டார் சைக்கிள். சாதாரண மாக மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் மோட்டார் சைக்கிள் செல் சென்னையில் தயாராகும் க்ருசேடர்' மோட்டார் சைக்கிள். படத்திலுள்ளது ஏற்றுமதி ரகத்தைச் சார்ந்தது மைசூரில் தயாராகும் 'ஜாவா ' மோட்டார் சைக்கிள் லும். மணிக்கு 100 கிலோ மீட்டருக்கும் மேலான வேகத்தில் செல்லக்கூடிய தனி வகை மோட்டார் சைக்கிள்களும் உள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற் பகுதியில், மேல் நாட்டில் எந்திரத்தால் இயங்கும் வாகனங்களை அமைக்கத் தொடங்கியபோது, மோட்டார் சைக்கிள் உருவாகியது. அப்போது மூன்று சக்கரங் களைக் கொண்ட வாகனங்களே பெரும் பாலும் தயாரிக்கப்பட்டன. அதற்குப் பின் படிப்படியாகப் பல மாற்றங்களைச் செய்து, 1900ஆம் ஆண்டில் இன்று உள்ளதுபோன்ற உள்ளெரி எஞ்சின் (த.க.) பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் உருவாகியது. பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் காவல்துறைக்கும் ராணுவத்திற்கும் மோட்டார் சைக்கீன் இன்று பெரிதும் பயன்பட்டுவருகிறது. இந்தியாவில் ஹரியானா, கருநாடகம்(மைசூர்), தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. மோட்டார் சைக்கிளைக் காட்டிலும் எனிய அமைப்பும் தோற்றமும் உடையது ஸ்கூட்டர். இரண்டாம் உலக யுத்தத் திற்குப் பிறகு டி அசானியோ (d Asconio) என்ற இத்தாலியர் இதனை அமைத்தார். இந்தியாவில் ஹரியானாவிலும், பம்பாய், புணஆகிய இடங்களிலும் இன்று ஸ்கூட்டர் தயாரிக்கப்படுகிறது. சைக்கிள் ஓட்டுவதற்கு உரிமம் (Licence) தேவையில்லை. ஆனால் மோட்டார் சைக் கிள், ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு உரிமம் பெற வேண்டும். மோட்டார் சைக்கிளிலும் ஸ்கூட்டரி லும் இருவர் செல்லலாம். ஒருவரே அமர்ந்து ஓட்டிச் செல்லக் கூடிய சிறிய வகை மோட்டார் சைக்கிள்களும் இந்தியா வில் பல இடங்களில் தயாராகின்றன.