பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்புறம் மோட்டார் வண்டிகள் சாலையில் மோட்டார் வண்டிகள் : வேகமாகச் செல்லும் கார், பஸ், லாரி, ஜீப் போன்ற பலவகையான வாகனங்களை இன்று நாம் பார்க்கிறேம். இவை யாவும் மோட்டார் எஞ்சின் என்னும் எந்திரத் தால் இயங்குகின்றன. எனவே இவற்றுக்கு மோட்டார் வண்டிகள் என்று பெயர். உலகின் எல்லா நாடுகளிலும் மக்கள் பயன்படுத்தும் சிறந்த போக்குவரத்து சாதனங்களாக மோட்டார் வண்டிகள் உள்ளன. மோட்டார் வண்டியை முதலில் உருவாக்கியவர் யார் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது; காலத்தையும் திட்ட வட்டமாகக் கூற இயலாது. பல நாடுகளி லும் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளினால் மோட்டார் வண்டி படிப் படியாக உருவாகி இன்றைய நிலையை அடைந்துள்ளது. எந்திரத்தால் வாகனங்களை ஓட்டவேண் டும் என்ற முயற்சி நெடுங்காலமாக இருந்துவந்தது. கியூனாட் (Cugnot) என்ற பிரெஞ்சுத் தளபதி 1770-ல் பீரங்கி வண்டியை இழுத்துச் செல்ல ஓர் எந்தி ரத்தை அமைத்தார். அது நீராவியால் இயங்கும் எந்திரம். அதைத் தொடர்ந்து நீராவி எந்திர வண்டிகள் தோன்றலாயின. ஆனால் அவற்றால் வேகமாகச் முடியாது; நீராவி எந்திரம் பெரிதாகவும் இருந்தது. ஆகவே ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா முதலிய நாடுகளில் பலர் இந்த எந்திரத்தைத் திருத்தி அமைக் கும் முயற்சியில் ஈடுபட்டனர். செல்ல பெட்ரோலிய எண்ணெயால் இயங்கும் எந்திரம் 1860-ல் அமைக்கப்பட்டது. இதைக் காரில் பொருத்தி ஓட்டத் தொடங்கினர். இந்த எந்திரத்தை அமைத்ததில் ஜெர்மனியைச் சேர்ந்த ஆட்டோ (Otto), டேம்லர் (Daimler), பென்ஸ் (Benz) ஆகியோர் முக்கியமானவர்கள், ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட பந்தயக் கார். இது மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. 65 இவர்களுள் பென்ஸ் 1887 முதல் கார்களை உற்பத்தி செய்து விற்கத் தொடங்கினார். டன்லப் (Dunlop) என்ற அமெரிக்கர் 1888-ல் காற்றடைத்த சக்கரங்களைக் காரில் பொருத்தி ஓட்டுவதற்கு வழி கண் டார். கார் உற்பத்தி முறைக்கு உதவிய மற்றோர் அமெரிக்கர் போர்டு (Ford, த.க.). மோட்டார் காரின் வளர்ச்சியில் ஏற்பட்ட மாறுதல்களைக் காட்டும் சில படங்கள் 1905 1902 1892 1914 1925 1960 h பின்புறம்