பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 மோட்டார் வண்டிகள் இவர் 1903-ல் தம் மோட்டார் நிறுவனத்தை அமைத்தார். காரின் அமைப்பைச் சீர்திருத்தி, உற்பத்தி முறை யில் புதிய வழிகளைக் கையாண்டு, குறைந்த விலையில் இவர் கார்களை விற்கத் தொடங் கினார். முதல் உலக யுத்தத்திற்குப் பிறகு காரின் அமைப்பிலும் உற்பத்தியிலும் பெரும் முன்னேற்றம் ஏற்படலாயிற்று. இப்போது ஒவ்வோராண்டும் புதுப் புது வடிவங்களில் கார்களைத் தயாரித்து வருகின்றனர். அவ்வப்போது உறுப்புகளி லும் முன்னேற்றமான பல மாறுதல்களைச் செய்து வருகிறார்கள். கார்களில் பல வசதிகளும் உள்ளன. வானொலி, தொலை பேசி முதலிய சாதனங்களைக் காரில் பொருத்திக் கொள்ளலாம். காற்றுப் பதனாக்கம் (Air Condition) செய்யப்பட்ட துப்புரவு மோட்டார் லாரி MDU5885 கார் பஸ் எடைமிகுந்த, நீளமான பொருள்களை எடுத்துச் செல்வதற்கான லாரி 81-74