பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மோட்டார் காரை இயக்கப் பயன்படும் அமைப்புகள் மோர்ஸ் கார்களும் உள்ளன. பந்தயத்திற் கெனத் தனி வகைக் கார்கள் உண்டு. இவற்றின் உருவம் மிக வேகமாகச் செல்வ தற்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். இன்று இந்தியாவில் கல்கத்தா, பாய், சென்னை ஆகிய இடங்களில் மோட் டார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை கள் உள்ளன. காரில் ஆயிரக்கணக்கான உறுப்புகள் உள்ளன. இவற்றுள் மிக முக்கியமானது எஞ்சின். இது உள்வெரி எஞ்சின் (த.க.) வகையைச் சேர்ந்தது. பெட்ரோலிய எண்ணெயும் காற்றும் கலந்த கலவையை எரிக்கச் செய்து, கார் இயங்குவதற்கான சக்தியை இந்த எஞ்சின் உண்டாக்குகிறது. பஸ், லாரி முதலியவற்றிலும் சிலவகைக் கார்களிலும் டீசல் எண்ணெய் எரிபொருளாகப் பயன்படுகிறது; இரண் டாம் உலக யுத்தத்தின்போது மரக் கரியும் பயன்பட்டது. மோட்டார் வண்டிகளை ஓட்டுவதற்குச் சில விதிமுறைகள் உண்டு. அவற்றைப் பின்பற்றி நடக்க வேண்டியது அவசியமாகும். மோட்டார் வண்டிகளை ஓட்டுவதற்கு, நல்ல பயிற்சி பெற்றுப் பின்னர் அதற்கான உரிமத்தையும் (Licence) பெறவேண்டும். உரிமம் இன்றி மோட் டார் வண்டிகளை ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். பார்க்க : போக்குவரத்து. மோர்ஸ் (Morse, 1791-1872) : தொலைவிலுள்ளவர்களுக்குக் கடிதம் எழுதிச் செய்திகளைத் செய்திகளைத் தெரிவிக்கிறோம். செய்தி மிக விரைவில் போய்ச் சேரவேண்டு மென்றால் அச் செய்தியைத் தந்தி (த.க.) மூலம் அனுப்புகிறோம். இத் தந்திமுறை யைக் கண்டுபிடித்தவர் மோர்ஸ் என்ற அமெரிக்கர். கல்லூரியில் படிக்கும்பொழுது விஞ் ஞானத்தில்தான் மோர்ஸ் ஆர்வம் கொண் டிருந்தார். எனினும் 1810-ல் பட்டம் பெற்றதும், ஓவியராகவேண்டும் என்று 67 முடிவு செய்து, இவர் லண்டன் சென்று ஓவியம் பயிலத் தொடங்கினார். பின்னர் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குச் சென்று ஓவியக் கலைக்கூடங்களைப் பார்வை யிட்டார். 1832-ல் அமெரிக்கா திரும்பிய பொழுதுதான் இவருக்குத் தந்தி பற்றி ஆராய்ச்சி நடத்தவேண்டும் என்ற எண் ணம் தோன்றியது. 1835-ல் தம் வீட்டு அறையிலே ஒரு தந்திக் கருவியை அமைத்து இயக்கி, அதில் வெற்றி கண்டார். 1837-ல் மக்களுக்கு இதை விளக்கி, இயக்கிக் இயக்கிக் காட்டினர். இதை விரிவான முறையில் அமைக்கப் பொருளுதவி கோரினார். ஆனால் எவரும் உதவ முன்வரவில்லை. அமெரிக்கா மட்டு மன்றி இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளும் இதில் அக்கறை காட்டவில்லை.' தளராத உள்ளம் கொண்ட மோர்ஸ் இறுதியில் 1843-ல் அமெரிக்காவின் உதவியைப் பெற்றூர். வாஷிங்க்டனிலுள்ள அமெரிக்க உயர் நீதிமன்றத்திலிருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பால்ட்டி மோர் என்னும் நகரத்திற்குத் தந்திக் கம்பி அமைத்து, மக்கள் முன்னிலை யில் தந்திமூலம் செய்தி அனுப்பிக் காட் டினார். இவர் புகழ் உலகெங்கும் பரவியது. இன்று தந்திமூலம் செய்தியனுப்பப் பயன்படும் குறியீட்டு முறை இவர் பெயராலேயே (Morse code) வழங்குகிறது. தந்திக் கருவி எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஐந்தாம் தொகுதியில் 'தந்தி" என்ற தலைப்பில் காணலாம். A. B... J மோர்ஸ் குறியீட்டு முறை N P D-.. Q E. R F... G—— T H.... U.. I .. V W K X L... Y M- Z. -- 1. 6 ... 2.- 7 3 8 9 10 4