பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

68 யானை: சர்க்கஸ் காட்சிகளிலும் சில கோயில்களிலும் நீங்கள் யானையைப் பார்த்திருப்பீர்கள். விலங்குக்காட்சிசாலை கள் பலவற்றில் குழந்தைகள் யானைமீது அமர்ந்து சவாரி செய்யலாம். நிலத்தில் வாழும் விலங்குகளுள் மிகப் பெரியது யானை. இந்தியா, இலங்கை, பர்மா, தாய் லாந்து முதலிய ஆசிய நாடுகளிலும், மத்திய ஆப்பிரிக்காவில் சில நாடுகளிலும் மட்டுமே யானை காணப்படுகிறது. யானையின் நிறம் கறுப்பு. ஆனால் மிக அரிதாக, முற்றிலும் வெள்ளை நிறமான சில யானைகளும் உண்டு. யானையின் தோல் மிகத் தடிப்பானது. உரோமம் அதிகம் இருக்காது. வாயின் அருகேயும், துதிக் கையின் அருகேயும் வளர்ந்துள்ள ரோமங் கள் உணர்ச்சி மிக்கவை. யானையின் விநோதமான உறுப்பு அதன் துதிக்கையாகும், யானையின் முக்கும் மேல் உதடும் இணைந்து நீண்ட துதிக்கையாக வளர்ந்துள்ளது. துதிக்கை மிகவும் வலிமை யான உறுப்பு. துதிக்கையை வேண்டிய வாறு திருப்பவும் வளைக்கவும் யானையால் முடியும். இது யானைக்கு ஒரு கைபோல உதவுகிறது. துதிக்கையின் நுனிப்பகுதி விரல்போல் உள்ளது. இதன் உதவியால், தரையில் கிடக்கும் காசு, வேர்க்கடலை போன்ற சிறிய பொருள்களையும் யானை எடுத்துவிடும்! இலை, தழைகளைப் பறித்து உண்ணவும் நீர் குடிக்கவும் துதிக்கை பயன் படுகிறது. யானையின் மற்றொரு சிறப்பான உறுப்பு அதன் தந்தம். யானையின் மேல் யானை வாயில் உள்ள இரு பற்கள், கொம்புகள் போல் நீண்டு தந்தமாக வளர்கின்றன. தந்தம் பற்றித் தனிக் கட்டுரை உள்ளது. யானையின் கண் சிறியது; பார்வையும் கூரியதல்ல. ஆனால்' சென்ப்புவணும் மோப்ப சக்தியும் அதிகம். யானை நீரில் நன்றாக நீந்தும். நீந்தும்பொழுது மூச்சு விடுவதற்காக, துதிக்கையை உயர்த்திக் கொள்ளும். யானை தாவரங்களை மட்டுமே உண்டு வாழும் தாவரந்தின்னியாகும். மரங்களின் இலை, பட்டை, காய், கனி, வேர், கிழங்கு முதலியன இதன் உணவு. மரத்திலுள்ள இலைகளைப் பறிப்பதற்காக, மரத்தின்மீது மோதி அதைக் கீழே சாய்த்துவிடும். மூங்கில் இலை, குருத்து, கரும்பு, வாழை, தேங்காய், அரிசி, சோளம் முதலியவற்றை யானை விரும்பி உண்ணும். யானை ஒரு தடவைக்கு ஒரு குட்டி தான் போடும். குட்டி இரண்டு, மூன்று ஆண்டுகள் தாயிடம் பால் குடிக்கும். யானை சுமார் நூறு ஆண்டுகள்வரை வாழும். காட்டில் யானைகள் கூட்டமாக வாழும். ஏதேனும் ஆபத்து என்றால் எல்லா யாண களும் ஒன்று சேர்ந்துகொள்ளும். யானையைப் பிடிப்பதற்கான கெடா' முறை. அடைப்புக்குள் யானை செல்வதைக் காணலாம்.