பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ராம்புருவாவில் கண்டெடுக்கப்பட்ட எருதுப் போதிகை ராம்புருவா - ராம்மோகன் ராய் ராம்புருவா: பண்டைக் காலத்தில் மக்கள் வாழ்ந்த நகரங்கள், கோட்டை கள் முதலியவை பூமியில் புதைந்து கிடப் பதைத் தொல்பொருளியல் ஆராய்ச்சி யாளர்கள் அகழ்ந்தெடுக்கிறார்கள். இந்த அகழ்வுகளை ஆராய்வதன்மூலம் அக் கால மக்களின் வாழ்க்கை முறை, சமயக் கொள்ளை, கலை, பண்பாடு, பழக்க வழக் கங்கள் முதலியவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் இவ்வாறு அகழ் வாராய்ச்சி நடந்த இடங்களில் ஒன்று ராம் புருவா. ராம்புருவா பீகார் மாநிலத்தில் உள்ளது. இங்கு, கி.மு. 8.ஆம் நூற்றான் டில் அரசாண்ட அசோகர் (த.க.) நிறுவிய எழுதுப் போதிகை ஒன்று கண் டெடுக்கப்பட்டது. பெளத்த மதத்தைப் பரப்புவதற்காக அசோகர் நிறுவிய கல் தூண்களில் ஒன்றின் உச்சியிலிருந்த எருதுப் போதிகையே இது. தொடர்ந்து இங்கு அகழ்வாராய்ச்சி நடத்தியதில், மௌரியப் பேரரசர்களின் காலத்தில், இங்குக் கலைகள் சிறந்தோங்கி விளங்கியதற்கான சான்று கள் கிடைத்துள்ளன. ராம்மோகன் ராய், ராஜா (1772- 1833): இந்தியாவின் புகழை வெளிநாடு களில் நிலைநிறுத்தியவர்களுன் ஒருவர் ராஜா ராம்மோகன் ராய். சமூகச் சீர் திருத்தவாதிகளுள் இவர் முதன்மையான வர். பெண்களுக்குச் சம உரிமை கிடைக் கப் பணியாற்றியவர். இவர் மேற்கு வங்காளத்தில் பர்துவான் மாவட்டத்தில் ராதாநகர் என்னுமிடத் தில் பிறந்தார். இளமை முதல் கல்வியி லும் ஒழுக்கத்திலும் சிறப்புற்று விளங்கி னார். இவர் தம் தாய்மொழியாய வங 83 காளி மொழியுடன் ஆங்கிலம், பாரசீகம், அரபு முதலிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். இவர் காசிக்குச் சென்று சமஸ்கிருத மொழியையும் வேத நூல்களையும் கற்றார். பௌத்த நூல்களைக் கற்க விரும்பித் திபெத்துக்குச் சென்று பாலி மொழியைப் பயின்றார். இருபதாம் வயதில் ராம் மோகன்ராய் தாயகம் திரும்பினார். பல சமய நூல்களையும் இவர் ஆராய்ந்து, அவற்றிலுள்ள நல்ல கருத்து களையெல்லாம் ஒன்று திரட்டி ஒரு புதிய சமயத்தை அமைக்க விரும்பினார். கடவுளைப் பல வடிவங்களாலும், பெயர் களாலும் வழிபடுவதை விரும்பாமல், அருவமான (உருவமற்ற) நிலையில் பரம் பொருளை வணங்குவதற்கென்று "பிரம சமாஜம்" என்ற சமய வழிபாட்டு இயக் கத்தை 1828-ல் தோற்றுவித்தார். அதன் காரணமாக எல்லாச் சமயங்களிலும் சீர் திருத்தங்கள் தோன்றின. பல அக் காலத்தில் கணவன் இறந்தபின் மனைவி 'சதி' என்னும் உடன்கட்டை ஏறும் கொடிய வழக்கம் இருந்தது. அதை நிறுத்த ராம்மோகன் ராய் அரும்பாடு பட்டார். பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்றும் இவர் வாதாடினார். இவைபோன்ற சீர்திருத்தங்கள் பற்றிப் பல கட்டுரைகள் எழுதிவந்தார். அப்பொழுது டெல்லியில் ஆண்ட மொகலாய மன்னர், ராம்மோகன் ராய்க்கு 'ராஜா' பட்டம் அளித்தார். அவருடைய தூதுவராக 1830-ல் இவர் இங்கிலாந்து சென்றார், அங்கு இவருக்குச் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. அங்கிருந்த போது இந்திய மக்களுக்கு ஆங்கிலேயர் செய்யவேண்டிய பல நன்மைகளைக் குறித் துப் பிரசாரம் செய்தார். மூன்றாண்டு களுக்குப் பின் இவர் நோயுற்று, இங்கிலாந்திலேயே காலமானார். ராஜா ராம்மோகன் ராய் .