பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

84 ராமசாமிப் பெரியார் ராமன் ராமசாமிப் பெரியார், ஈ.வெ. (1879–1973) : தமிழகத்தில் சமுதாயச் சீர்கேடுகளையும், மூடநம்பிக்கைகளையும் ஒழிப்பதற்காகப் பாடுபட்ட தலைவர் ஈ. வெ. ராமசாமிப் பெரியார். இவரை மக்கள் 'தந்தை' என்றும், 'பெரியார்' என்றும் அன்புடன் அழைத்து வந்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஈரோட்டில் 1879 செப்டெம்பர் 17ஆம் நாள் பெரியார் ஈ.வெ.ரா. பிறந்தார். பள்ளிப் படிப்பு இவரைக் கவரவில்லை. பத்தாம் வயதில் படிப்பை விடுத்து, தம் தந்தை நடத்திவந்த வாணிகத்தில் ஈடுபட் டார். 19ஆம் வயதில் நாகம்மை என்பவரை மணந்துகொண்டார். வாணிகத்தைக் கவனித்துக்கொண்டே இவர் அரசியலிலும் ஈடுபட்டார். 1919-ல் இவர் ஈரோடு நகராட்சித் தலைவரானார். அச் சமயம் காந்தியடிகளின் தலைமையில் இந்திய தேசீயக் காங்கிரஸ் நடத்திவந்த விடுதலைப் போராட்டம் இவரைக் கவர்ந் தது. 1920-ல் இவர் காங்கிரஸில் சேர்ந்து, மதுவிலக்குப் போராட்டம், தீண்டாமை ஒழிப்புப் போராட்டம், ஒத்துழையாமை இயக்கம், சுதர் இயக்கம் முதலியவற்றில் தீவிரப் பங்குகொண்டு பலமுறை சிறை சென்றார். கேரளத்திலுள்ள வைக்கம் என்ற ஊரில் அறப்போர் நடத்தி, அரிசனங்களுக்குக் கோயில் வழிபாட்டு உரிமை கிடைப்பதற்கு வழி செய்தார். இதனால், 'வைக்கம் வீரர்' என்று புகழ் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸின் தலைவ ராகவும் செயலாளராகவும் பணி யாற்றிய இவர், கருத்துவேறுபாடு காரணமாக 1925-ல் காங்கிரஸிலிருந்து விலகினார். 1926-ல் சுயமரியாதை இயக் கத்தைத் தொடங்கி, சமூகச் சீர்கேடுகளை எதிர்த்துப் பிரசாரம் செய்யலானர். 1929-ல் மலேயாவுக்கும், 1931-ல் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் நாடுகளுக்கும் சென்று வந்தார். 1938-ல் இவர் நீதிக் கட்சியின் (Justice Party ) தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். பின்னர், நீதிக் கட்சியையும் சுயமரியாதை இயக்கத்தையும் இணைத்துத் 'திராவிடர் கழகம்' என்ற கட்சியைத் தோற்றுவித்தார். இக் கட்சியின் சார்பில் சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் பலவற்றை நடத்தினார். 1938-ல் தமிழகப் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக் கியதை எதிர்த்து நடந்த கிளர்ச்சியில் முக்கியப் பங்குகொண்டார். இவருடைய மனைவி நாகம்மை 1944-ல் காலமானார். இவர் 1949-ல் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இதன் — ஈ.வெ. ராமசாமிப் பெரியார் விளைவாகத் திராவிடர் கழகத்தில் பிளவு ஏற்பட்டது. எனினும் இவர் தொடர்ந்து நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து சொற்பொழிவாற்றியும், மாநாடுகள், ஊர்வலங்கள் நடத்தியும் தமது கொள்கை களைப் பரப்பிவந்தார். சமூக ஏற்றத்தாழ்வையும், இழிநிலைகளை யும் மாற்றி, சாதி சமயமற்ற ஒரு புதிய சமுதாயத்தைத் தோற்றுவிக்க வேண்டும் என்பது இவருடைய கொள்கை. மக்களின் மூடப்பழக்க வழக்கங்களையும், பொரு ளற்ற மதச் சடங்குகளையும் இவர் வன்மை யாகக் கண்டித்தார்; நாட்டில் சாதி வேற் றுமை ஒழிய இவர் அயராது உழைத்தார். பெரியார் பாமர மக்களின் உள்ளத் தைக் கவரும் வகையில் பேசும் ஆற்றல் வாய்ந்தவர்; எழுதவும் வல்லவர். ஏழை எளிய மக்கனின் முன்னேற்றத்திற்காகவும், சமூகச் சீர்திருத்தத்திற்காகவும் அரை நூற்றாண்டுக்குமேல் அஞ்சா நெஞ்சத் தோடு பாடுபட்டுவந்த பெரியார் 1973 டிசம்பர் 24ஆம் நாள் தம் 94ஆம் வயதில் காலமானார். ராமன், சர் சீ.வீ. (1888-1970): நோபெல் பரிசு (த.க.) பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி சர் 8. வீ, ராமன், இவர் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத் திலுள்ள மாங்குடி என்னும் ஊரில் 1888 நவம்பர் 7ஆம் நாள் பிறந்தார். இவரது முழுப் பெயர் வெங்கடராமன். ராமன் கல்வி கற்பதில் மிகவும் ஆர்வ முடையவராய் இருந்தார். தந்தையிட மிருந்த அறிவியல் நூல்களைத் தாமாகவே படித்துத் தமது அறிவை வளர்த்துக் கொண்டார் ராமன். அந்நூல்களில்