பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ராமன் -ராலி படித்த பரிசோதனைகளைத் தமக்குச் செய்துகாட்டுமாறு இவர் தந்தையிடம் கேட்பார். தாமும் பல பரிசோதனை களை நடத்திப் பல உண்மைகளைக் கண் டறிந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பெளதிகத்தை முதற்பாடமாகக் கொண்டு முதன்மையாகத் தேறிப் பட்டம் பெற்றார். அப்பொழுது இவருக்கு வயது பதினாறு. முதலில் இவர் கல்கத்தாளில் துணைத் தலைமைக் கணக்கராகப் பதவி பெற்றார். பின்பு பர்மாவிலுள்ள ரங்கூனிலும், பின்னர் நாகபுரியிலும் பணியாற்றினார். அரசாங்கப் பணிபுரிந்துவந்தபோதிலும் இவர் மனம் விஞ்ஞான ஆராய்ச்சியையே தாடியது. பின்பு கல்கத்தாவிற்கு மாற்றம் பட்டதும் அங்குள்ள அறிவியல் வளர்ச் சிக் கழகத்தைக் கண்டார், அதன் தலைவரிடம் அனுமதி பெற்று, ஓய்வு நேரங் களிலும் விடுமுறை நாட்களிலும் கழகத் தின் ஆய்வுக்கூடத்தில் ஆய்வுகளைச் செய்து வந்தார். இதைத் தொடர்ந்து 1917-ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியல் கல்லூரியொன் றில் பேராசிரியர் பதவி இவருக்குக் கிடைத்தது. வானமும் கடலும் நீல நிறம் பெற் றிருப்பதன் காரணத்தை அறிய முயன் றார் ராமன். ஏழு ஆண்டுகளாக ஒளிச் சிதறல் பற்றி இவர் ஆராய்ச்சி நடத்தினார். சூரியனின் ஒளிக் கதிர்கள் காற்றினூடே செல்லும்போது காற்றி லுள்ள மூலக்கூறுகளால் பிரிந்து சிதறு கின்றன; அப்படிச் சிதறும்பொழுது சர் சீ. வீ. ராமன் 85 அதன் ஒளியில் அடங்கியுள்ள எல்லா நிறக் கதிர்களும் ஒரே அளவில் சிதறுவதில்லை; மற்றக் கதிரிகளைவிட மிகுதியாகச் சிதறும் நீலக் கதிர்களே எங்கும் பரவி வானத்தை நீலநிறமாக்குகின்றன. இவ்வாறே கடல் நீரிஸ் சூரியனின் கதிர்கள் நுழைந்து செல்லும்போது நீரின் மூலக்கூறுகளால் மிகுதியாகச் சிதறும் நீலநிறக் கதிர்கள் கடலை நீலநிறமாக்குகின்றன. இவ்வாறு தாம் கண்டறிந்த உண்மையை சீ. வீ. ராமன் விளக்கிச் கூறினார். இதற்கு "ராமன் விளைவு' (Raman Effect) என்பது பெயர். 1928ஆம் ஆண்டில் இவர் தமது ஆராய்ச்சி வெளியிட்டார். முடிவுகளை 1930-ல் இவருக்கு பௌதிகத்திற்கான நோபெல் பரிசு (த.க.) வழங்கப்பட்டது. பெங்களூரில் நிறுவப்பெற்ற இந்திய அறிவியற் கழகத்தின் தலைவர் பொறுப்பை 1933ஆம் ஆண்டில் இவர் ஏற்றார். 1949-60 தாமாகவே ஓர் ஆராய்ச்சிக் கழகத்தை (Raman Research Institute) இவர் நிறுவினார். இவர் சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். பல்கலைக்கழகங்களும் அறிவியற் அறிவியற் கழகங் களும் இவருக்குப் பரிசுகளும் பட்டங்களும் வழங்கின. ஆங்கில அரசு சீ. வீ. ராமனுக்கு 'சர்' பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இந்தியக் குடியரசு 1954ஆம் ஆண்டில் இவருக்கு 'பாரத ரத்னா' என்னும் விருதை அளித்துப் பாராட்டியது. இவர் இவர் 1970 நவம்பர் 21ஆம் நாள் தம் 82ஆம் வயதில் பெங்களூரில் காலமானார். ராலி, சர் வால்ட்டர் (Sir Walter Raleigh, 1562-1618): உலகப் புகழ்பெற்ற ஆங் கிலேய வரலாற்றாசிரியர் சர் வால்ட்டர் ராலி, பல கவிதைகளும் எழுதியிருக்கிறார். இவர் சிறந்த போர்வீரர்; நாடாய்வாளர். வட அமெரிக்காவில் ஆங்கிலேயர்கள் சென்று குடியேறுவதற்கு இவருடைய முயற்சிகளே வழிவகுத்தன. இங்கிலாத்தில் டெவன்ஷயரில்(Devonshire) பிறந்தார் ராஜி. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றூர். ஆனால் பட்டம் பெறாமலே வெளியேறினார். கடல் பயணத் தில் ஆர்வமுடையவராக இருந்தார். வட அமெரிக்காவில் குடியேற்றங்களை அமைக்க 1578-ல் சென்ற ஒரு குழுவுடன் இவரும் சென்றார். அயர்லாந்தில் 1580-ல் கிளர்ச்சி தோள்றியபொழுது, இவர் ஒரு படைக் குத் தலைமைதாங்கிச் சென்று அக் கிளர்ச்சியை அடக்கினர். அதன்மூலம் இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத்தின் நன்மதிப்பைப் பெற்றார். அரசவையில் இவர் பல பொறுப்புகளை வகித்து மிகுந்த செல்வாக்குடையவரானார்.