பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

86 ராஜகோபாலாச்சாரியார் ஸ்பானியக் கடற்படையினர் 1588-ல் இங்கிலாந்தைத் தாக்கினர். இவர் அப் படையினரைத் தோற்கடிக்க உதவினார். எலிசபெத் அரசி 1603-ல் இறந்ததும், முதலாம் ஜேம்ஸ் பட்டத்திற்கு வந்தார். அவர், ராலிமீது ஐயங்கொண்டு அரசத் துரோகக் குற்றஞ்சாட்டிச் சிறையில் அடைத்தார். சிறையிலிருந்த 13 ஆண்டு களில் 'உலக வரலாறு' என்னும் புகழ் பெற்ற வரலாற்று நூலை இவர் எழுதினார்; பல கவிதைகள் இயற்றினார். சிறையிலிருந்து 1616-ல் ராலி விடுதலை யானார். அமெரிக்காவில் ஒரு தங்கச் சுரங்கத்தைக் கண்டுபிடிக்க. அரசர் அனுமதி பெற்று, ஒரு கடற்படையுடன் சென்றார். இப் பயணத்தின்போது, அரசரின் ஆணையை மீறி ஸ்பானியருடன் போரிட்டார். இதை அறிந்த அரசர் இவரைத் திரும்பி வரும்படி உத்தரவிட்டு ஆணையை மீறியதற்காக மரணதண்டனை விதித்தார். ராஜகோபாலாச்சாரியார், சக்கர வர்த்தி (1878-1972) : இந்தியாவின் தலைமை ஆளுநராக (Governor General) இருந்த முதல் இந்தியர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார். இந்திய சுதந்தரப் போராட்டத்தில் பங்கு கொண்ட முக்கியத் தலைவராகவும் மூதறிஞராகவும் அரசியல் ஞானியாகவும் இவர் விளங்கினார். இவரை 'ராஜாஜி' என்று மக்கள் அன்புடன் அழைப்பர். தருமபுரி மாவட்டத்தில் ஹோசூருக்கு அருகிலுள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் 1878 டிசம்பர் 8ஆம் நாள் ராஜாஜி பிறந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்று, சேலத்தில் வழக்குரைஞர் தொழிலை நடத்திவந்தார். 1906-ல்.அன்னி பெசன்ட் அம்மையாரின் சுயாட்சி (Home Rule) இயக் கத்தில் பங்குகொண்டு அரசியலில் ஈடுபட் டார். 1919-ல் காந்தியடிகள் தொடங்கிய சத்தியாக்கிரக இயக்கத்தில் பங்குகொண் டார். 1920-ல் ஒத்துழையாமை இயக் கத்தில் கலந்துகொண்டார். 1942 வரை பல போராட்டங்களில் கலந்துகொண்டு பல முறை முறை சென்றர். 1921-22-ல் இந்திய தேசீயக் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்தார். 1937-ல் சென்னை (தமிழ்நாடு) சட்ட மன்றத்திற்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ராஜாஜி தலைமை அமைச்சராக பொறுப்பேற்று அரசாங்கம் அமைத்தார். 1939-ல் தொடங்கிய இரண்டாம் உலக யுத்தத்தில், இந்தியத் தலைவர்களைக் கேட்காமல் பிரிட்டன் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தியதை எதிர்த்துக் காங்கிரஸ் காங்கிரஸ் செய்த முடிவுக் கேற்ப ராஜாஜி பதவியிலிருந்து விலகினார். என 1942-60 உலக யுத்தம் உச்சநிலையை அடைந்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஓர் உடன்பாட்டுக்கு வந்தால், இந்தியா விற்குச் சுதந்தரம் வழங்குவதாக பிரிட்டன் கூறியது. முஸ்லிம்களுக்குத் தனி நாடு பிரித்துக் கொடுப்பதே நல்லது ராஜாஜி அகில இந்தியக் காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தார். முதலில் இதற்கு மறுத்தாலும் பின்னர் முஸ்லிம்களுக்குத் தனி நாடு பிரித்துக் கொடுக்கக் காங்கிரஸ் முடிவெடுத்தது. அதன்பின் இந்தியா விடுதலை யடைந்தது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு. ராஜாஜி பல முக்கியப் பொறுப்புகளை வகித்தார். 1947-48-ல் மேற்கு வங்காளத்தின் ஆளுநராக இருந்தார். 1948 ஜூனில் இந்தியாவின் தலைமை ஆளுநராகப் பொறுப்பேற்று, 1950 ஜனவரி 26-ல் இந்தியா குடியரசாகும் வரை அப் பதவியை வகித்தார். 1950- '51-60 மத்திய அரசில் உள்துறை அமைச்சராகவும், 1952 முதல் 1954 வரை சென்னை மாநில முதலமைச்சராகவும் பணியாற்றினார். நாளடைவில் காங்கிரஸ் அரசின் கொள்கைகள் இவருக்கு ஏற் புடையனவாக இல்லை. அதனால் 1959-ல் இவர் சுதந்தராக் கட்சியை நிறுவினார். அணு ஆயுத சோதனைகளை நிறுத்து வதற்கு ராஜாஜி அயராது பாடுபட்டார். ராஜாஜி ஒரு சமூக சீர்திருத்தவாதி. இந்தியாவில் மதுவிலக்கைச் செயல்படுத்த வேண்டுமென மிகத் தீவிரமாக இருந்தார்.