பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ராஜஸ்தான் - ருமேனியா சென்று தீண்டாதார் ஆலயத்திற்குள் வழிபடவும் ராஜாஜி காரணமாக இருந் தார். ராஜாஜி சிறந்த பேச்சாளர்; ஆங்கிலத் திலும் தமிழிலும் சிறந்த எழுத்தாளர். ஆங்கிலத்தில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். தமிழில் சக்கர வர்த்தித் திருமகன். வியாசர் விருந்து. கீதைக்கும் உபநிடதத்திற்கும் விளக்கங் கள், குழந்தைகளுக்காகப் பல சிறுகதைகள் முதலியவற்றை எழுதியுள்ளார். ய இந்திய அரசின் மிக உயர்ந்த விருதாகிய 'பாரத ரத்னா' விருது 1954-ல் ராஜாஜிக்கு வழங்கப்பட்டது. 1972 டிசம்பர் 25ஆம் நாள் ராஜாஜி தம் 94ஆம் வயதில் கால மானார். ராஜஸ்தான்: இந்தியாவின் மாநிலங் களுள் ஒன்று ராஜஸ்தான். இது நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ளது. வடக்கில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களும், கிழக்கில் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாதிலங்களும், தெற்கில் குஜராத் மாநிலமும், மேற்கில் பாக்கிஸ் தானும் எல்லைகள். இம் மாநிலத்தின் பரப்பு 3,42,200 சதுர கிலோமீட்டர். மக்கள் தொகை 2,57,24,000 (1971). சுதந்தரத்திற்கு முன்பு இங்கு உதயப் பூர், ஜோத்பூர், ஜயப்பூர், பிக்கானர் முதலிய சிற்றரசுகள் பல இருந்தன. இவற்றை இணைத்து ராஜஸ்தான் மாநிலம் அமைக்கப்பட்டது. ராஜஸ்தானி, இந்தி ஆகியவை இங்கு வழங்கும் முக்கிய மொழிகள். இம் மாநிலத்தின் குறுக்கே ஆரவல்லி மலைத்தொடர் உள்ளது. இதற்கு மேற்கி லிருப்பது தார் பாலைவனமாகும். கிழக்கி லிருக்கும் பகுதி செழிப்பானது. காடுகளும் உள்ளன. சோளம், கோதுமை, பார்லி, பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி முதலியன முக்கிய விளைபொருள்கள். ரயான், பஞ்சாலைகள், சிமென்டு, சர்க்கரைத் தொழிற்சாலைகள் முதலியன இங்கு உள்ளன. ராணா பிரதாப் சாகர் என்னுமிடத்தில், அணுசக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையம் உள்ளது. கோபால்ட், துத்தநாகம், செம்பு காரீயம், இரும்பு முதலிய உலோக தாதுக்களும் இம் மாநிலத்தில் கிடைக்கின்றன. மக்ரானா என்னுமிடத் தில் சலவைக் கல் சுரங்கங்கள் உள்ளன. உ ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரம் ஜயப்பூர். பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜந்தர் மந்தர் வானாராய்ச்சி நிலையங்களுள் ஒன்று இங்கு உள்ளது. - 87 ஜயப்பூரிலும், உதயப்பூர், அஜ்மீர், சித்தூர், ஜோத்பூர், பிக்கானர் முதலிய இடங்களிலும் உள்ள அரண்மனைகளும் கோட்டைகளும் புகழ்பெற்றவை. ஆபு (த.க.) மலையில் சமணக் கோயில்கள் உள்ளன. இங்குள்ள சிற்பங்கள் மிகவும் அழகானவை. ருமேனியா : ஐரோப்பாக் கண்டத் தின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள குடியரசு நாடு ருமேனியா. வடக்கில் ரஷ்யாவும், கிழக்கில் கருங்கடலும் தெற் கில் பல்கேரியாவும் மேற்கில் ஹங்கேரி, யூகோஸ்லாவியா நாடுகளும் எல்லை இந் நாட்டின் பரப்பு 2,37,500 சதுர கிலோமீட்டர், மக்கள்தொகை சுமார் இரண்டு கோடி (1969). பூக்கரெஸ்ட் (Bucharest) இந் நாட்டின் தலை நகரம். கள். ருமேனியாவின் வடக்கிலும் மத்திய பகுதியிலும் மலைகள் உள்ளன. மற்ற பகுதி கள் தாழ்ந்த சமவெளிகளாகும். டான்யூப் ஆறு இந் நாட்டின் தென் எல்லையாக ஓடிக் கருங்கடலில் கலக்கிறது. இதுவும் இதன் கிளையாறுகளும் கப்பல் போக்குவரத்துக்கு உதவியாக உள்ளன. மலைச் சரிவுகளில் அடர்ந்த காடுகள் உள்ளன. கோடையில் இந் நாட்டில் வெப்பம் மிகுதி. குனிர்காலத்தில் குனிர் அதிகம். குளிர்காலத்தில் டான்யூப் ஆறு மூன்று மாதம் உறைந்துவிடுகிறது. ருமேனியாவில் வேளாண்மையே முக்கியத் தொழில். கோதுமை, சோளம், புகையிலை, பீட் கிழங்கு, உருளைக்கிழங்கு, திராட்சை, அத்தி முதலியன முக்கிய விளைபொருள்கள். இங்குப் பெட்ரோலிய எண்ணெய் மிகுதியாகக் கிடைக்கிறது. தங்கம், வெள்ளி, இரும்பு, மக்னீசியம், செம்பு, காரீயம் ஆகிய உலோகங்களும் பாறை உப்பு, நிலக்கரி, இயற்கை வாயு (த.க.) முதலியளவும் கிடைக்கின்றன. ருமேனியா ருமேனியா யூகோஸ்லாவியா கோதுமை இ பெட்ரோலியம் பூக்கரெஸ்ட் ரஷ்யா டான் ஆது. பல்கேரியா -சோளம் நிலக்கரி புகையிலை திராட்சை இயற்கை வாயு