பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரெயில்கள் 89 கானடாவிலுள்ள மிகப் பெரிய ரெயில் மையம் பகுதிகளில் மரத்தாலான தண்டவாளங் களை அமைத்து, அவற்றின்மீது வண்டிகளை ஏற்றி, குதிரைகளைக் கொண்டு அவற்றை இழுக்கச் செய்தார்கள். 1768-ல் மரத் திற்குப் பதிலாக இரும்புத் தண்டவாளங் களைப் பயன்படுத்தினார்கள். நீராவி எஞ்சின் கண்டுபிடிக்கப்பட்ட தும், அதைக் கொண்டு ரெயிலை இழுக் கச் செய்ய முயன்றனர். தண்டவானத் தில் இயங்கும் நீராவி ரெயில் எஞ்சினை முதன் முதலில் ரிச்சர்டு டிரெவிதிக் (Richard Trevithick) என்ற ஆங்கிலேயர் 1804-ல் அமைத்தார். இதை ஸ்டீவன்சன் (த.க.) திருத்தியமைத் என்னும் ஆங்கிலேயர் தார். அவர் 40 கிலோமீட்டர் நீள முள்ள இருப்புப் பாதையை அமைத்து, 1825 செப்டெம்பர் 27-ல் ரெயில் வண்டித் தொடர் ஒன்றைத் ஒன்றைத் தாம் அமைத்த எஞ்சினைக் கொண்டு ஓட்டிக் காட்டினார். அவர் அமைத்த ரெயில் எஞ்சினின் அடிப்படையிலேயே இன்றைய நீராவி ரெயில் எஞ்சின்கள் தயாரிக்கப்படுகின்றன. ரெயில்கள் ஓடுவதற்கான தண்டவாளங் கள் எஃகினால் ஆனவை. ரெயில் பாதை அமைக்கும்போது வழியில் ஆறு அல்லது ஏரி குறுக்கிட்டால் பாலம் கட்டுகிறார்கள். மலைகள் எதிர்ப்பட்டால், மலையைக் குடைந்து குடைவு வழி (த.க.) அமைத்து ரெயில் பாதை அமைக்கிறார்கள். மக்கள் தொகை மிகுதியான பெரிய நகரங் களிலும், போக்குவரத்து அதிகமாக உள்ள நகரங்களிலும் போக்குவரத்து நெருக்