பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

90 INDIAN RAILWAYS ரெயில்கள் - ரேடியம் சென்னையிலுள்ள ரெயில் பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ரெயில் பெட்டி கடியைச் சமாளிக்க, பூமிக்கு அடியில் ரெயில் பாதை அமைக்கிறார்கள். இதைத் தரையடி ரெயில் (த.க.) என்பார்கள். மலைப் பகுதிகளில் உள்ள ரெயில்பாதை களில் ஏறும்பொழுது சக்கரங்கள் வழுக்கி விடாமலிருக்கத் தண்டவாளங்களுக்கு இடையில் பற்களுடன்கூடிய மூன்றாவது தண்டவாளத்தை அமைக்கின்றனர். மேலும். மலைரெயிலில் அதிகப் இல்லாத ரெயில் எஞ்சினைப் பயன்படுத்து கிறார்கள். மலைரெயில் பாதையில் எஞ்சின் பின்புறமிருந்து ரெயில் வண்டியை மேல் நோக்கித் தள்ளும். 1853 ஏப்ரல் பளு 16-60 ஆசியாக் கண்டத்திலேயே முதன் முதலாக இந்தியாவில்தான் ரெயில் பாதை அமைந்தது. பம்பாயிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலுள்ன தானாவுக்கு இருப் புப் பாதை அமைக்கப்பட்டது. அதன்பின் நாட்டின் பல பகுதிகளிலும் ரெயில் பாதை கள் அமைந்தன. முதலில் ஆங்கிலேயருக் குச் சொந்தமான தனிப்பட்ட பல கம்பெனிகளே இந்தியாவில் ரெயில் போக்குவரத்தை நடத்திவந்தன. இந்தியா சுதந்தரமடைந்த பிறகு இவை அர சுடைமையாக்கப்பட்டன. தொடக்க காலத்தில் அமெரிக்காவில் அமைந்த ரெயில் வண்டி இந்தியாவில் சித்தரஞ்சன் ரெயில் எஞ்சின் தொழிற்சாலையில் (த.க.) எல்லா வகை நீராவி எஞ்சின்களும் மின்சார, டீசல் எஞ்சின்களும் தயாராகின்றன. காசியி லுள்ள ரெயில் எஞ்சின் தொழிற்சாலை யில் டீசல் - மின்சார ரெயில் எஞ்சின்கள் தயாராகின்றன. தமிழ்நாட்டில் சென்னை பிரம்பூரிலுள்ள இணைப்பு ரெயில்பெட்டித் தொழிற்சாலையில் (Integral Coach Factory ) ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. ரேடியம் (Radium ) : மருத்துவத் துறையில் ரேடியம் மிகவும் பயன்படுகிறது. புற்றுநோய்ச் (த.க.) சிகிச்சைக்கு இது இன்றியமையாதது. உலோகம். ரேடியம் கதிரியக்கத் (த.க.) தன்மை யுள்ள ஒரு தனிமம் (த.க.). இது ஓர் இதை பிரெஞ்சு விஞ்ஞானி கியூரி (த.க.) அம்மையார் 1898-ல் கண்டு பிடித்தார். தூய்மையான நிலையில் ரேடியம் வெள் னியைப் போல் பளபளப்பாக இருக்கும். ஆனால் காற்றுப் பட்டால் கறுத்துவிடும். இது காற்றிலுள்ள நைட்ரஜனுடன் கூடி எனவே ரசாயன மாற்றம் அடைகிறது. இது இயற்கையில் தனியாகக் கிடைப்ப தில்லை. மற்றத் தனிமங்களுடன் சேர்ந்து கூட்டுப் பொருளாகவே கிடைக்கின்றது. இது 700° வெப்ப நிலையில் உருகும். கதிரியக்கத்தால் யுரேனியம் தோரிய மாக மாறும். தோரியம் ரேடியமாக மாறு கிறது. பின்னர் ரேடியமும் காரீயமாக மாறிவிடும். யுரேனியம் அடங்கிய தாதுப்பொருளில் ரேடியமும் கலந்தே காணப்படும். இது செக்கோஸ்லோவாக்கியாவி லும் மத்திய ஆப்பிரிக்காவிலும் கிடைக்கிறது. ரேடியம் அடங்கிய மற்றெரு தாதுப்பொருள் கார்னொட்டைட் (Carnotite). ரேடியத் தைப் பிரித்தெடுப்பது எளிதல்ல. தாதுப் பொருளைப் பல ரசாயன வினைகளுக்கு உட்படுத்தித் தூய்மையான ரேடியத்தைப் பிரித்தெடுக்கிறார்கள். ரேடியத்திலிருந்து வெளிப்படும் கதிர் கள் தம் உடலில் பட்டால் வலி உண்டாகும்; சில நாட்களில் புண் தோன்றும். இது எனிதில் ஆறாது. மேலும், இக்கதிர்கள் சதையை ஊடுருவி இரத்தம், எலும்பு முதலியவற்றைக் கடுமையாகத் தாக்குகின்றன. எனவே, கதிரியக்கத் தன்மை வாய்ந்த ரேடியத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளவேண் டும். இதைக் கண்ணாடிக் குழாய்சுனில் அடைத்து அவற்றைக் கனமான ஈயப் பெட்டிகளில் வைத்துப் பாதுகாக்கிறார் கள். பார்க்க : கதிரியக்கம்; கியூரி.